புகாரின் விவரங்கள்
21 வயதாகும் பாதிக்கப்பட்ட மாணவி, அரக்கோணம் காவனூர் பகுதியைச் சேர்ந்த தெய்வசெயல் (40) தன்னை காதலிப்பதாக ஏமாற்றி, ஏற்கனவே திருமணமாகியும் கடந்த ஜனவரி 31 அன்று சோளிங்கர் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டதாகத் தனது புகாரில் தெரிவித்துள்ளார். தனது பெற்றோரைக் கொலை செய்து விடுவதாக மிரட்டியே தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்ததாக மாணவி குற்றம் சாட்டியுள்ளார். திருமணத்திற்குப் பிறகு சுமார் இரண்டு மாதங்கள் (மார்ச் மாதம் வரை) சுமூகமாகச் சென்ற நிலையில், திடீரென தெய்வசெயல் தன்னை திமுகவின் முக்கிய பிரமுகர்களுக்கு “இரையாக்க” முயற்சி செய்ததாக மாணவி தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், தன்னை தினமும் கடுமையாகத் தாக்கியதாகவும், உடம்பெல்லாம் கடித்து துன்புறுத்தியதாகவும், காயங்கள் இருப்பதாகவும் மாணவி கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.

