ஈப்போ: கம்போங் சிமியில் உள்ள ஒரு வீட்டில், கணவனால் தாக்கப்பட்டதாக நம்பப்படும் பெண் ஒருவர் இன்று உயிரிழந்தாக நம்பப்படுகிறது. இந்த விஷயத்தை உறுதிப்படுத்திய பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹாசன் பஸ்ரி, இந்த வழக்கு இன்னும் ஈப்போ மாவட்ட காவல்துறையின் விசாரணையில் இருப்பதாகக் கூறினார்.
சம்பவத்தை நான் உறுதிப்படுத்துகிறேன். முழு விசாரணைக்காக, ஈப்போ OCPD (ஈப்போ மாவட்ட காவல்துறைத் தலைவர் ACP, Abang Zainal Abidin Abang Ahmad) அவர்கள் தற்போது அனைத்தையும் (ஆதாரங்களை) சேகரித்து வருவதால், (வழக்கு) இன்னும் விசாரணையில் உள்ளது என்று பெர்னாமா இன்று தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டதை அவர் உறுதிப்படுத்தினார். மேலும் சந்தேக நபர் குற்றச் செயல்களில் பயன்படுத்தியதாக நம்பப்படும் கத்தி உள்ளிட்ட பொருட்களையும் போலீசார் காரின் அருகில் கண்டுபிடித்தனர். முன்னதாக, சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரை தாக்கும் முன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த பெண் அடிக்கடி குடும்ப வன்முறைக்கு ஆளானதாக நம்பப்படுவதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


