• Login
Friday, October 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“கணவரிடம் பிரதமர் மோடி பேசியது பெருமிதம் அளிக்கிறது!” – ஸ்மித் மச்சாரின் மனைவி உருக்கம்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 2, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
“கணவரிடம் பிரதமர் மோடி பேசியது பெருமிதம் அளிக்கிறது!” – ஸ்மித் மச்சாரின் மனைவி உருக்கம்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 02, 2026 3:17 PM IST

விமானம் வெறும் 30 வினாடிகளில் சுமார் 14,000 அடி கீழே செங்குத்தாகச் சரிந்தபோதிலும், பலத்த காயங்களுடன் போராடி விமானி அறையின் கதவை ஸ்மித் திறந்து கொடுத்துள்ளார்

News18
News18

துபாயிலிருந்து டெல் அவிவ் சென்ற ப்ளை துபாய் விமானத்தின் விமானி அறையில் சக உதவி விமானியால் தாக்குதலுக்கு உள்ளாகி பலத்த காயமடைந்த நிலையிலும், திறமையாகச் செயல்பட்டு 174 உயிர்களைக் காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரை, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்தார். அபுதாபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஸ்மித்திடம் பிரதமர் பேசியதற்கு, அவரது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சி.என்.என்-நியூஸ்18 (CNN-News18) செய்தி நிறுவனத்திற்குப் பிரத்யேக பேட்டியளித்த ஸ்மித்தின் மனைவி சோனல் மச்சார், “பிரதமர் மோடி தனது பிஸியான நேரத்திலும் எனது கணவரிடம் பேச நேரம் ஒதுக்கியது எங்களுக்கு அளப்பரிய மகிழ்ச்சியைத் தருகிறது. ஸ்மித் செய்த காரியத்தைக் கண்டு எங்கள் குடும்பமே பெருமிதம் கொள்கிறது. ஒரு நாட்டின் பிரதமர் ஒரு சாதாரண குடிமகனுக்காகவும் அவரது குடும்பத்திற்காகவும் நேரில் போன் செய்து பேசுவது சாதாரண விஷயமல்ல. இதற்கு பிரதமர் மோடிக்கு என் மனமார்ந்த நன்றிகள்” எனக் குறிப்பிட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கணவர் தற்போது  நலமுடன் இருப்பதாகத் தெரிவித்த சோனல், அந்த அச்சமூட்டும் சம்பவத்தின் நினைவுகள் மீண்டும் வந்து அவரைப் பாதிக்கக்கூடாது என்பதற்காக, விமானி அறையில் என்ன நடந்தது என்பது பற்றி அவரிடம் குடும்பத்தினர் எதுவும் கேட்கவில்லை என்றும், அவர் முழுமையாகக் குணமடைந்தவுடன் அனைத்தையும் அவரே பகிர்ந்து கொள்வார் என்றும் கூறினார்.

கடந்த புதன்கிழமை அன்று நடைபெற்ற இச்சம்பவத்தில், உதவி விமானி கேப்டன் ஸ்மித்தைக் கத்தியால் குத்திவிட்டு விமானத்தைக் கீழே விபத்துக்குள்ளாக்க முயன்றுள்ளார்.

விமானம் வெறும் 30 வினாடிகளில் சுமார் 14,000 அடி கீழே செங்குத்தாகச் சரிந்தபோதிலும், பலத்த காயங்களுடன் போராடி காக்பிட் கதவை ஸ்மித் திறந்து கொடுத்துள்ளார். இதனால் வெளியிலிருந்த ஊழியர்களும் பயணிகளும் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியவரைக் கட்டுப்படுத்தினர். பின்னர் விமானத்திலிருந்த பிற விமானிகளின் உதவியுடன் சவுதி அரேபியாவின் தபூக்கில் விமானம் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது.

ஸ்மித்தின் உடல்நிலை குறித்து ஒட்டுமொத்த இந்திய மக்களும் பிரார்த்தனை செய்து வருவதாகக் குறிப்பிட்ட சோனல், நாட்டு மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் வார்த்தைகளால் நன்றி சொல்ல முடியாது என்றும், தனது கணவர் மட்டுமின்றி விமானத்தில் இருந்த அனைவரும் உயிருடன் காப்பாற்றப்பட்டதற்கு இறைவனுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

முன்னதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹுவும் ஸ்மித்தைப் ‘உண்மையான வீரன்’ என்று பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்மித் முழு குணமடைந்த பின் நேதன்யாஹுவிடம் பேசுவார் என்றும் சோனல் தெரிவித்தார்.

Read More

Previous Post

துமிந்தவிற்கு எதிரான தங்க முலாம் துப்பாக்கி வழக்கு : நீதிமன்றின் உத்தரவு

Next Post

Asian Games | மழை காரணமாக இந்தியா – பாகிஸ்தான் ஃபைனல் ரத்தானால் தங்கப் பதக்கம் யாருக்கு? | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post
Asian Games | மழை காரணமாக இந்தியா – பாகிஸ்தான் ஃபைனல் ரத்தானால் தங்கப் பதக்கம் யாருக்கு? | Sports News (விளையாட்டு செய்திகள்)

Asian Games | மழை காரணமாக இந்தியா - பாகிஸ்தான் ஃபைனல் ரத்தானால் தங்கப் பதக்கம் யாருக்கு? | Sports News (விளையாட்டு செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin