சிங்கப்பூரில் கட்டுமான தளத்தின் உயரத்திலிருந்து ஒருவர் விழுந்து இறந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் (நவம்பர் 13) ஜூரோங் ரீஜியன் பாதைக்கான MRT கட்டுமான தளத்தின் நடந்தது.
நீரில் மிதந்த உடல்.. விசாரணையை தொடரும் போலீஸ்
இதில் 46 வயதான கட்டுமான மேற்பார்வையாளர் கீழே விழுந்து இறந்தார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
கட்டுமான சாரக்கட்டு அமைப்பில் இருந்து இறங்கும்போது சுமார் 9மீ உயரத்தில் இருந்து அவர் விழுந்தார் என மனிதவள அமைச்சகம் (MOM) மற்றும் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) கூட்டாக தெரிவித்துள்ளன.
202 பாண்டன் கார்டன்ஸ் அருகே அன்று மாலை 5:30 மணிக்கு உதவி வேண்டி அழைப்பு வந்ததாக SCDF சொன்னது.
பின்னர் காயமடைந்த ஊழியர், இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்தார்.
அவர், Leze Construction நிறுவனத்தில் வேலைபார்த்தவர்.
விசாரணைகள் நடந்து வருகின்றன.
இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த LTA, இறந்தவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டது.
மேலும் தேவையான உதவியையும் வழங்கி வருவதாக LTA கூறியது.
லிட்டில் இந்தியா: தேக்கா நிலையத்தில் வார இறுதியில் ஏற்படும் சண்டை சச்சரவுகள்… காவல்துறை தலையீடு

