சின் மிங்கில் உள்ள கட்டுமான தளத்தில் கிரேன் கவிழ்ந்து விழுந்த சம்பவத்தில் 37 வயது ஊழியர் ஒருவர் காயமடைந்தார்.
இந்த சம்பவம், 28 சின் மிங் ஸ்ட்ரீட்டில் உள்ள BTO கட்டுமான தளத்தில் அக்டோபர் 10 ஆம் தேதி மாலை 5.25 மணிக்கு நடந்தது.
மேலும் இது குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் (SCDF) தகவல் தெரிவிக்கப்பட்டது.
கிரேன் அகற்றப்பட்டபோது மேற்பார்வையிட ஊழியர் அருகில் இருந்ததாக மனிதவள அமைச்சகத்தின் (MOM) செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியுள்ளது.
கிரேன் ஏற்றப்பகுதி உடைந்து, அதன் கைப்பகுதி தரையில் விழுந்தது, அப்போது அந்த இடத்தில் இருந்த ஊழியரை அது தாக்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னர் அந்த ஊழியர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக MOM மற்றும் HDB ஆகியவை தெரிவித்தன.
எதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்பது குறித்த தகவலை அவைகள் குறிப்பிடவில்லை.
குவான் யோங் கட்டுமான நிறுவனத்துடன் இணைந்து, ஊழியரின் குடும்பத்திற்குத் தேவையான உதவி வழங்கப்படும் என்று HDB தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு.. புதுமுகங்களை டார்கெட் செய்யும் கும்பல் – சிக்கிய இருவர் கைது