Last Updated:
ஒரு ப்ராஜெக்ட்டுக்கான நிறைவு சான்றிதழ் வழங்கப்படுவதற்கு முன்பு செலுத்தப்படும் பேமெண்ட்களில் மட்டுமே GST பெறப்படுகிறது.
கட்டுமானத்தில் உள்ள ஒரு குடியிருப்பு யூனிட்டை வாங்கலாம் என்று நீங்கள் யோசித்துக் கொண்டிருந்தால், இந்த 2025ல் அதற்கான சரக்கு மற்றும் சேவை வரிகளுக்கு (GST) ஆகக்கூடிய மிகப்பெரிய செலவையும் நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். ரெடி-டு-மூவ் ப்ராப்பர்ட்டிகளை பொருத்தவரை GST கிடையாது. ஆனால், அதே சமயத்தில் கட்டுமானத்தில் உள்ள ப்ராப்பர்டிகளுக்கு GST உச்சவரம்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இது உங்களுடைய வீட்டை உரிமையாக்கி கொள்வதற்கான மொத்த செலவில் சேர்க்கப்படும். GST என்பது நிறைவு சான்றிதழ் வழங்கப்படுவதற்கு முன்பு டெவலப்பர் அல்லது பில்டருக்கு கொடுக்கப்படும் பேமெண்ட்களோடு சேர்க்கப்படும்.
ஆகஸ்ட் 2025 பொருத்தவரை கட்டுமானத்தில் உள்ள கட்டடங்களுக்கான GST விகிதங்கள் என்பது 2019 முன்மொழியப்பட்ட விகிதங்களுக்கு உட்படுகிறது.
இன்புட் டேக்ஸ் கிரெடிட் (ITC) இல்லாமல் ஒரு சதவீத GST
ITC இல்லாமல் 5 சதவீத GST
அனைவரும் வாங்கக் கூடிய வகையில் மலிவு விலையில் கிடைக்கும் வீடுகள் ஒரு சில தரநிலைகளுக்கு உட்பட்டு வரையறுக்கப்படுகிறது
கார்பெட் ஏரியா 60 சதுர அடிக்கு அதிகமாக இல்லாமல், வீட்டின் விலை 45 லட்ச ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
90 சதுர அடி வரையிலான கார்பெட் ஏரியா மற்றும் 45 லட்சம் வரையிலான விலை.
இவை தவிர பிற அனைத்து ப்ராஜெக்ட்களுக்கும் 5% GST வசூலிக்கப்படும். இதற்கு ITC விகிதங்கள் கிடையாது. இதன் காரணமாக டெவலப்பர்களால் பில்டிங் மெட்டீரியல் போன்ற செலவுகளுக்கு ஆன பணத்தை அவர்களால் திரும்ப பெற முடியாது. இதனால் ஒட்டுமொத்த செலவு பாதிக்கப்படுகிறது.
ஒரு ப்ராஜெக்ட்டுக்கான நிறைவு சான்றிதழ் வழங்கப்படுவதற்கு முன்பு செலுத்தப்படும் பேமெண்ட்களில் மட்டுமே GST பெறப்படுகிறது. ஒரு வீடு முழுமையாகி ஆக்கிரமிப்பதற்கு தயாராக இருக்கும் பட்சத்தில் அந்த வீட்டிற்காக நீங்கள் GST செலுத்த தேவையில்லை. எனவே நீங்கள் எப்போது பேமெண்ட் செலுத்துகிறீர்கள் என்பது மிகவும் முக்கியமானது. ஒருவேளை வீட்டை உரிமையாக்கி கொள்வதற்கு முன்பு அதனை புக்கிங் செய்த கஸ்டமர் கேன்சல் செய்துவிட்டு அதற்கான ரீஃபண்ட் பணத்தை பெற்று விட்டால், பில்டர் அரசிடமிருந்து GST பணத்தை கிளைம் செய்து கொள்ளலாம். எனவே, வீட்டை வாங்குபவர்கள் பேமெண்ட் செலுத்துவதற்கு முன்பு ரீஃபண்ட் குறித்த விதிகளை கவனமாக படிக்க வேண்டும்.
ITC நீக்கப்பட்டிருப்பதன் காரணமாக அடிப்படை விலைகளை டெவலப்பர்கள் அதிகப்படுத்துவதற்கு வழிவகுத்துள்ளது. இந்த செயல்முறை கஸ்டமர்களுக்கு வரி செலுத்துவதை எளிமைப்படுத்தி இருந்தாலும், அவர்கள் வாங்கக்கூடிய சொத்தின் உண்மையான விலை குறித்த வெளிப்படை தன்மை இங்கு குறைகிறது. தகுந்த வரி ரசீது மற்றும் தெளிவான GST ஆகியவற்றை தனித்தனியாக செலவுக்கான பிரேக்கப்பாக வழங்க வேண்டும். நீங்கள் வாங்கும் சொத்துக்கான இறுதி செலவுத்தாள் சரியாக வழங்கப்பட்டிருக்கும் பட்சத்தில் நீங்கள் அதை தைரியமாக வாங்கலாம். ஒருவேளை அப்படி கொடுக்காமல் இருந்தால் அது மறைமுக கட்டணங்கள் இருக்கக்கூடும்.
August 08, 2025 5:18 PM IST
கட்டுமானத்தில் உள்ள வீட்டை வாங்கும் போது GST வரி செலுத்த வேண்டுமா? அவசியம் தெரிஞ்சுக்கோங்க!


