மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகள் கட்டுப்பாட்டை மீறிச் செல்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் (Antonio Guterres) தெரிவித்துள்ளார்.
மோதலில் ஈடுபட்டுள்ள தரப்புகள் உடனடியாக ஓரடி பின்வாங்க வேண்டிய தருணம் இதுவென எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
உலக நாடுகளின் தலைவர்களுக்குத் தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளப் பக்கம் ஊடாக அவசரச் எச்சரிக்கை ஒன்றை அவர் விடுத்துள்ளார்.
அவசர வேண்டுகோள்
அதிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், “அனைத்துப் பகுதிகளிலும் சண்டைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
The situation in the Middle East is getting out of control.
It’s time to step back.
My clear & consistent message to leaders:
The fighting must stop everywhere.
Freedom of navigation must be restored.
Diplomacy is the only way forward. pic.twitter.com/ZfOdMyq1Td
— António Guterres (@antonioguterres) July 23, 2026
கடற்போக்குவரத்துச் சுதந்திரம் மீண்டும் மீட்டெடுக்கப்பட வேண்டும்.
இராஜதந்திர பேச்சுவார்த்தை மட்டுமே ஒரே தீர்வாகும்” எனத் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான இராணுவ மோதல்களும், ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள கப்பல் போக்குவரத்துப் பிரச்சினைகளும் பிராந்தியப் போராக உருவெடுத்து வரும் பின்னணியிலேயே ஐ.நா பொதுச் செயலாளர் இந்த அவசர வேண்டுகோளை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

