லங்காவி:
இங்குள்ள ஜாலான் தெலுக் யூ அருகே உள்ள பந்தாய் பாசிர் ஹித்தாமில் ஒரு பெண் ஓட்டிவந்த கார், கட்டுப்பாட்டை இழந்து செங்குத்தான கடற்கரை பள்ளத்தாக்கில் விழுந்தது, இதில் அவர் பெண் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
22 வயதான ஹோட்டல் தொழிலாளியான அவர், பந்தாய் கோக்கில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது, ஒரு வளைவில் தனது காரின் கட்டுப்பாட்டை இழந்தார்.
இதனால் கார் சாலையை விட்டு விலகி, பள்ளத்தாக்கில் பாய்ந்து கடற்கரைக்கு அருகில் நின்றது என்று, லங்காவி காவல்துறை தலைவர் உதவி ஆணையர் ஷரிமான் ஆஷாரி தெரிவித்தார்.
அந்தப் பெண்ணின் இடது மணிக்கட்டில் சுளுக்கு ஏற்பட்டதாகவும், இடது முழங்காலில் லேசான வெட்டுக் காயம் ஏற்பட்டதாகவும் அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
“பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விபத்தில் கார் மோசமாக சேதமடைந்தது.”
போலீசார் இந்த வழக்கை 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 43(1) இன் கீழ் வகைப்படுத்தியுள்ளனர்.


