கோடக் மஹிந்திரா வங்கியின் இணை நிர்வாக இயக்குநர் கே.வி.எஸ் மணியன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மணியன் மூத்த கடன் வழங்குநராக இருக்கிறார். அதன்படி அவர் கடந்த 30 ஆண்டுகளாக இந்த துறையில் பணியாற்றி வருகிறார். கடந்த சிலா நாட்களுக்கு முன்பு நிர்வாக மறு சீரமைப்பு நடைபெற்ற போது இவர் பதவி உயர்வு பெற்றார்.
ரிசர்வ் வங்கி அதன் தொழில்நுட்ப கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளுக்காக புதிய கிரெடிட் கார்டுகளை விற்பதை நிறுத்துவது உட்பட கடனளிப்பவருக்கு கடுமையான வணிக கட்டுப்பாடுகளை விதித்தது. இது அறிவிக்கப்பட்ட ஒரு சில நாட்களிலேயே மணியன் பதவி விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மணியன் நுகர்வோர், வணிகம், மொத்த விற்பனை, மற்றும் தனியார் வங்கி உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்களை வழி நடத்தியுள்ளார். இவர் ஐஐடியில் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் படித்தார். அதனை தொடர்ந்து மும்பையில் உள்ள ஜம்னாலால் பஜாஜ் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸில், நிதி நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
இந்நிலையில் நேற்று (30.04.2024) கோடக் மஹிந்திரா வங்கி, துணை நிர்வாக இயக்குநர் சாந்தி ஏகாம்பரம், முதலீட்டு வங்கி, நிறுவன பங்குகள் மற்றும் மணியன் மேற்பார்வையிட்ட சொத்து மறுசீரமைப்பு வணிகங்களை மேற்பார்வையிடுவார். அதே நேரத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள எம்.டி மற்றும் சிஇஓ அசோக் வாஸ்வானி, நேரடியாக மொத்த வணிக மற்றும் தனியார் வங்கி அறிக்கையை கையாளுவார் என கூறியுள்ளது.
அதுமட்டுமன்றி மணியன் தங்களோடு 29 ஆண்டுகள் பயணித்ததாகவும் அவருக்கு நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்வதாகவும் கூறியுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
