அமெரிக்கா கட்சியைத் தொடங்கியதை அடுத்து, தொழிலதிபர் எலான் மஸ்க் நிறுவனப் பங்குகளின் மதிப்பு கடுமையாக சரியத் தொடங்கியுள்ளது.
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் தொழிலதிபருமான எலான் மஸ்க், அமெரிக்காவின் குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிகளுக்கு மாற்றாக அமெரிக்கா கட்சியைத் தொடங்கியுள்ளதாக அந்நாட்டின் சுதந்திர தினத்தன்று (ஜூலை 4) அறிவித்தார்.
புதிய கட்சியைத் தொடங்குவது குறித்து எக்ஸ் தளப் பக்கத்தில் நடத்திய வாக்கெடுப்பில் மூன்றில் 2 பங்கு மக்கள் ஆதரவு தெரிவித்ததால், புதிய கட்சி அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அமெரிக்க மக்களுக்கு தங்களின் சுதந்திரத்தை மீட்டளிப்பதே அமெரிக்கா கட்சியின் நோக்கம் எனவும் எலான் மஸ்க் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, எலான் மஸ்க் இவ்வாறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

