ஜாலான் புசார் பகுதியில் லாரி மற்றும் காருக்கு இடையே ஏற்பட்ட விபத்தில் இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
நேற்று முன்தினம் (நவம்பர் 25) மாலை 4:20 மணியளவில் ஜாலான் புசார் மற்றும் ரோவல் சாலை சந்திப்பில் நடந்த விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்ததாக கூறியுள்ளனர்.
வேற லெவெலுக்கு மாறவுள்ள “வெளிநாட்டு ஊழியர்களின் தங்கும் விடுதிகள்” – சிறப்பு வசதிகள் Upgrade
கார் மீது மோதிய லாரி அருகில் உள்ள கடைவீட்டில் மோதி முன்பக்கவாட்டு சுவர்கள் சேதமடைந்தன.
இதில் 35 வயதுடைய லாரி ஓட்டுநரும், 42 வயதுடைய ஒரு கார் ஓட்டுநரும் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஒருவர் டான் டோக் செங் பொது மருத்துவமனைக்கும், மற்றொருவர் ராஃபிள்ஸ் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் Mothership-பிடம் கூறினார்.
விபத்து தொடர்பான காணொளி இணையத்தில் தீயாக பரவியது.
லாரியின் கண்ணாடி உடைந்து, அதன் முன்பக்கம் சிதைந்து சேதமடைந்தது.
காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.
வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தாத லாரிகள்: பிடிபட்டால் தடை, வழக்கு… S$50,000 வரை அபராதம்

