• Login
Friday, July 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கடைசி 6 இன்னிங்ஸில் வெறும் 79 ரன்கள்.. வேலையை காட்டிய இஷான் கிஷன்.. கொஞ்சமும் பொறுப்பு இல்லை! | Ishan Kishan: Ishan Kishan scored just 79 runs in 6 innings against England and Ireland which shocked indian fans

GenevaTimes by GenevaTimes
July 10, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
கடைசி 6 இன்னிங்ஸில் வெறும் 79 ரன்கள்.. வேலையை காட்டிய இஷான் கிஷன்.. கொஞ்சமும் பொறுப்பு இல்லை! | Ishan Kishan: Ishan Kishan scored just 79 runs in 6 innings against England and Ireland which shocked indian fans
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Cricket

oi-Yogeshwaran Moorthi

Time
Published: Thursday, July 9, 2026, 22:54 [IST]

பிரிஸ்டோல்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் இஷான் கிஷன் 6 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். கடைசியாக ஆடிய 6 இன்னிங்ஸில் இஷான் கிஷன் வெறும் 79 ரன்களை மட்டுமே சேர்த்திருப்பது ரசிகர்களிடையே கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார். வழக்கம் போல் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை. இந்திய அணி மொத்தமாக 8 இடதுகை பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கியது.

Ishan Kishan

இந்திய அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி – அபிஷேக் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. டங்க் வீசிய 2வது ஓவரிலேயே வைபவ் சூர்யவன்ஷி ஒரு பவுண்டரி, சிக்ஸ் விளாசி அசத்தினார். ஆனால் ஆர்ச்சர் வீசிய அடுத்த ஓவரிலேயே 15 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து வந்த அனுபவ வீரரான இஷான் கிஷன் 6 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இஷான் கிஷன் மீண்டும் ஒருமுறை ஷார்ட் பாலுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். இஷான் கிஷன் பேட்டிங் செய்ய களமிறங்கினாலே கொஞ்சம் நெஞ்சை நோக்கி ஷார்ட் பாலை வேகமாக வீசினால் போதும். அவராகவே தூக்கி அடித்து விக்கெட்டை கொடுத்துவிடுவார் என்று பேசும் வகையில் அவரது ஆட்டம் அமைந்திருக்கிறது.

கடைசியாக ஆடிய 6 இன்னிங்ஸில் இஷான் கிஷன் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அயர்லாந்து டி20 தொடர் மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 4 இன்னிங்ஸ் சேர்த்து மொத்தமாக 6 இன்னிங்ஸில் 79 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். ஒரேயொரு இன்னிங்ஸில் மட்டும் 40 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார். மற்ற போட்டிகளில் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதன் மூலமாக இஷான் கிஷன் இந்திய மைதானங்களில் மட்டுமே சிறப்பாக பேட்டிங் செய்வார் என்ற விமர்சனங்கள் அதிகரித்துள்ளது. கொஞ்சம் கூட பிட்ச் மற்றும் சூழலுக்கு ஏற்றவாறு விளையாட வேண்டும் என்ற எண்ணமே இஷான் கிஷனிடம் இல்லை. தேவையே இல்லாமல் ஷார்ட் பாலை அட்டாக் முயன்று விக்கெட்டை கொடுப்பது தொடர் கதையாகி வருகிறது. இதனால் இஷான் கிஷனை பெஞ்ச் செய்ய வேண்டும் என்ற பேச்சுகளும் எழுந்துள்ளன.

English summary

Ishan Kishan: Ishan Kishan scored just 79 runs in 6 innings against England and Ireland which shocked indian fans

Read More

Previous Post

நவாலி பேரவலத்தின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

Next Post

பெங்களூருவில் இன்று மின்தடை: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது? முழு விவரம் இதோ! | Bengaluru Power Cut Today: Check Affected Areas And Timings For July 9, 2026

Next Post
பெங்களூருவில் இன்று மின்தடை: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது? முழு விவரம் இதோ! | Bengaluru Power Cut Today: Check Affected Areas And Timings For July 9, 2026

பெங்களூருவில் இன்று மின்தடை: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது? முழு விவரம் இதோ! | Bengaluru Power Cut Today: Check Affected Areas And Timings For July 9, 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin