• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கடைசிப் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பெரும் மாற்றம்? சுப்மன் கில்லுக்கு ஓய்வு, ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!

GenevaTimes by GenevaTimes
October 25, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
கடைசிப் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பெரும் மாற்றம்? சுப்மன் கில்லுக்கு ஓய்வு, ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி நாளை (செப்டம்பர் 29) விளையாட உள்ளது. இந்திய அணி ஏற்கெனவே ஒருநாள் தொடரை இழந்த நிலையில், ஆறுதல் வெற்றியை நோக்கமாகக் கொண்டு களமிறங்க உள்ளது. கடந்த இரண்டு போட்டிகளில் பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், இந்தக் கடைசி ஆட்டத்தில் மாற்றம் நிகழலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கில், இங்கிலாந்து டெஸ்ட் தொடர், ஆசியக் கோப்பை, வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் எனத் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். இதனால், டி20 தொடருக்கு முன்பாக அவருக்கு ஓய்வு கொடுக்க பயிற்சியாளர் கவுதம் கம்பீர் முடிவெடுத்துள்ளார் என்று தெரிகிறது.

கில் ஓய்வெடுப்பதால், அணியின் துணைக் கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன் பொறுப்பை ஏற்க உள்ளார். கடந்த சில மாதங்களாக இந்தியா ஏ அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் செயல்பட்டு வருகிறார். எனவே, சுப்மன் கில்லுக்கு மாற்றாக இவரைத் தயார் செய்வதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் பார்க்கப்படுகிறது.

சுப்மன் கில்லுக்குப் பதிலாக மாற்றுத் தொடக்க வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்திய அணியுடன் நீண்ட காலமாகப் பயணித்து வந்தாலும், ஜெய்ஸ்வால் இதுவரை ஒரேயொரு ஒருநாள் போட்டியில் மட்டுமே ஆடியிருக்கிறார்.

ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதற்குப் பின்னால் உள்ள முக்கியக் காரணங்கள், அவரை 2027 உலகக்கோப்பைத் தொடருக்காகத் தயார் செய்வது இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும், ஜெய்ஸ்வாலுக்கு அளிக்கப்படும் வாய்ப்புகளில் அவர் பெரிய சாதனைகளைப் படைத்தால், அது ரோகித் சர்மாவின் ஓய்வு முடிவும் விரைவாக எடுக்கப்படும் சூழ்நிலையை உருவாக்கலாம். ஒருவேளை ரோகித் சர்மா திடீரென ஓய்வை அறிவித்தால், அவரது இடத்தில் விளையாட ஜெய்ஸ்வால் தயாராக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.

தொடரை இந்திய அணி ஏற்கெனவே இழந்துவிட்டதால், ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு வழங்க கம்பீர் முடிவெடுத்திருக்க அதிக வாய்ப்புள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக, பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஜெய்ஸ்வாலுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது. இதனால், நாளைய ஆட்டத்தில் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

மனைவியை விவாகரத்து செய்கிறாரா பிரபல கிரிக்கெட் வீரர்..? ரசிகர்கள் ஷாக்

Next Post

இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தை: “அவசரமாக ஒப்பந்தங்களை மேற்கொள்ளமாட்டோம்” – மத்திய அமைச்சர் பேச்சு | India Won’t Sign Trade Deals Under Pressure, Says Piyush Goyal in Berlin

Next Post
இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தை: “அவசரமாக ஒப்பந்தங்களை மேற்கொள்ளமாட்டோம்” – மத்திய அமைச்சர் பேச்சு | India Won’t Sign Trade Deals Under Pressure, Says Piyush Goyal in Berlin

இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தை: "அவசரமாக ஒப்பந்தங்களை மேற்கொள்ளமாட்டோம்" - மத்திய அமைச்சர் பேச்சு | India Won’t Sign Trade Deals Under Pressure, Says Piyush Goyal in Berlin

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin