Last Updated:
குப்வாரா ஜப்தி கிராமத்தில் கடும் பனிப்பொழிவில் இந்திய ராணுவம் 26 வயது கர்ப்பிணி பெண்ணை தோளில் சுமந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்று உயிரைக் காப்பாற்றியது.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலவும் கடும் பனிப்பொழிவு மற்றும் உறைபனிக்கு மத்தியில், இந்திய ராணுவத்தினர் ஒரு கர்ப்பிணியின் உயிரைக் காப்பாற்றிய வீடியோ நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஜப்தி கிராமத்தைச் சேர்ந்த 26 வயதுடைய கர்ப்பிணி ஒருவருக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்பகுதியில் பெய்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு, போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டிருந்தது. அந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாத இக்கட்டான சூழல் நிலவியது.
பாதுகாப்புப் பணியில் இருந்த இந்திய ராணுவத்தினர் இதுகுறித்து அறிந்து, உடனடியாக அந்தப் பெண்ணின் வீட்டிற்கு விரைந்தனர். எந்திரங்கள் செல்ல முடியாத அளவிற்குப் பனி குவிந்திருந்ததால், ராணுவ வீரர்கள் அந்தப் பெண்ணைத் தங்களது தோளில் சுமந்தபடி கரடுமுரடான பனிப்பாதைகளில் நடக்கத் தொடங்கினர்.
உறைபனியையும் பொருட்படுத்தாமல், பல கிலோமீட்டர் தூரம் சுமந்து சென்று அருகில் உள்ள மருத்துவ வசதி கொண்ட இடத்திற்கு அந்தப் பெண்ணைப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்த்தனர். சரியான நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், அந்தப் பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டது.
Jammu,Jammu,Jammu and Kashmir
கடும் பனிப்பொழிவு, உறைபனி.. கர்ப்பிணியின் உயிரைக் காப்பாற்றிய இந்திய ராணுவம்.. நெகிழ்ச்சி வீடியோ!
