Last Updated:
Livigno நகரத்தில் 2026 குளிர்கால ஒலிம்பிக் தொடங்குகிறது. பனிப்பொழிவில் Snowboard Big Air உள்ளிட்ட போட்டிகள், போட்டியாளர்கள் மகிழ்ச்சி, ஏற்பாட்டாளர்கள் தயாராகின்றனர்.
கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் இத்தாலியில் நாளை குளிர்கால ஒலிம்பிக் தொடங்குகிறது.
இத்தாலியில் உள்ள லிவிக்னோவில் (Livigno) ஒலிம்பிக் கிராமத்தில் தற்போது பனிப்பொழிவு விளையாடி வருகிறது. 2026 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடத்த ஒலிம்பிக் கிராமமான லிவிக்னோ நகரம் தயாராக உள்ளது. இங்கு, ஸ்னோபோர்டு (Snowboarding) மற்றும் ஃப்ரீஸ்டைல் ஸ்கீயிங் (Freestyle Skiing) ஸ்னோபோர்டு பிக் ஏர் (Snowboard Big Air) உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்த நிலையில், லிவிக்னோவில் 2 ஆவது நாளாக பனிப்பொழிவு நிலவியது. நேற்று நாள் முழுவதும் பனிப்பொழிவு காணப்பட்டது. ஒலிம்பிக் கிராமத்திற்கு வந்துள்ள போட்டியாளர்கள் பனிக்கட்டிகளில் கால்பந்து விளையாடியும், குழு புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் போட்டி நடைபெறும் இடங்களில் உள்ள பனிக்கட்டிகளை அப்புறப்படுத்தி வருகின்றனர். ஆண்களுக்கான ஸ்னோபோர்டு பிக் ஏர் (Snowboard Big Air) தகுதிச் சுற்றுப் போட்டிகள் இன்று நடைபெறுகின்றன. நாளை தொடக்க விழாவு நடைபெற இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாகவே சில தகுதிச் சுற்றுப் போட்டிகள் தொடங்குகின்றன.
Feb 05, 2026 11:10 AM IST


