மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் கடந்த வார முடிவில் 75,364.69 புள்ளிகளில் இருந்த நிலையில் இன்று கிட்டத்தட்ட 4,000 புள்ளிகள் சரிந்து 71,449.94 புள்ளிகளில் தொடங்கியது.
இன்று காலை 9.40 மணியளவில் சென்செக்ஸ் 72648.17 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி கடந்த வார முடிவில் 22904.45 புள்ளிகளில் இருந்த நிலையில் இன்று 1200 புள்ளிகள் வரை குறைந்து 21,743.65 வர்த்தகமானது.
இன்று காலை 9.40 மணியளவில் நிஃப்டி 22088.45 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
பெரும்பாலால பங்குகள் இன்று சரிவுடன் வர்த்தகமாகி வரும் நிலையில், உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான சந்தைகளும் சரிவிலேயே தொடங்கியுள்ளன.

