“ஜாம்நகரில் உள்ள எங்கள் வீட்டிலிருந்து துவாரகாதீஷ் கோயிலுக்கு பாதயாத்திரையாக செல்கிறோம். கடந்த ஐந்து நாட்களாக நாங்கள் நடந்து வருகிறோம். இன்னும் இரண்டு முதல் நான்கு நாட்களுக்குள் நாங்கள் துவாரகாதீஷ் கோயிலை அடைவோம். கடவுள் இருக்கும்போது எந்த வேலையும் தடைகள் இல்லாமல் முடிக்கப்படும் என்பதால், எந்த வேலையையும் தொடங்குவதற்கு முன்பு துவாரகாதீஷ் மீது நம்பிக்கை வைத்து அவரை நினைவில் கொள்ளுமாறு இளைஞர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அனந்த் அம்பானி ஊடகங்களுக்கு பேட்டி அளித்தபோது கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி ரிலையன்ஸ் அறக்கட்டளையின் வந்தாரா வனவிலங்கு மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தைத் திறந்து வைத்து, அனந்த் அம்பானியுடன் அந்த வசதியைப் பார்வையிட்டார். இதையடுத்த சில நாட்களுக்குப் பிறகு இந்த பாதயாத்திரை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த ஆண்டு அனந்த் துவாரகாதீஷ் கோயிலுக்கு ஆனந்த் அம்பானி வருகை தருவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னர் கடந்த ஜனவரி 2025 இல், அனந்த் தனது தந்தையும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவருமான முகேஷ் அம்பானியுடன் துவாரகாதீஷ் கோயிலுக்கு வந்திருந்தார். துவாரகாதீஷ் கோயிலுக்கு அம்பானி குடும்பத்தினர் அடிக்கடி வருவது, அவர்களின் ஆழமான வேரூன்றிய நம்பிக்கையை எடுத்துக்காட்டும் விதமாக அமைந்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளாவிலும் அம்பானி குடும்பத்தினர் பங்கேற்றனர், திரிவேணி சங்கமத்தில் அவர்கள் புனித நீராடினர். ஆன்மீகத்தைத் தழுவி, அம்பானி குடும்பத்தின் நான்கு தலைமுறைகள் இந்த யாத்திரையில் லட்சக்கணக்கானவர்களுடன் இணைந்தனர். கங்கை, யமுனை மற்றும் புராண சரஸ்வதி நதிகளின் புனித நீர் சங்கமத்தில் நீராடினர்.
இதையும் படிக்க: பாதுகாப்பான நாடுகளின் பட்டியல்.. அமெரிக்காவை முந்திய இந்தியா.. பாகிஸ்தானுக்கு எந்த இடம்?
இந்த புனித நீராடலின்போது, முகேஷ் அம்பானியுடன் அவரது தாயார் கோகிலாபென், அவரது மகன்கள் ஆகாஷ் மற்றும் அனந்த், மருமகள்கள் ஸ்லோகா மற்றும் ராதிகா, பேரக்குழந்தைகள் பிருத்வி மற்றும் வேதா, மற்றும் அவரது சகோதரிகள் தீப்தி சல்கோகர் மற்றும் நினா கோத்தாரி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் முகேஷ் அம்பானியின் மாமியார் பூனம்பென் தலால், மற்றும் மைத்துனர் மம்தாபென் தலால் ஆகியோரும் புனித நீராடினர்.
#WATCH | Devbhumi Dwarka, Gujarat: Anant Ambani, Director, Reliance Industries Limited, is on a ‘Padyatra’ from Jamnagar to Dwarkadhish Temple
He says, “The padyatra is from our house in Jamnagar to Dwarka… It has been going on for the last 5 days and we will reach in another… pic.twitter.com/aujJyKYJDN
— ANI (@ANI) April 1, 2025
ஜூன் 2024 இல் ராதிகா மெர்ச்சன்ட்டைத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு, அனந்த் அம்பானி மகாராஷ்டிராவின் நெரலில் உள்ள கிருஷ்ணா காளி கோயிலுக்குச் சென்றார், அங்கு அவர் தனது திருமணத்திற்கு ஆசீர்வாதம் பெற ஒரு ஹவன் விழாவை நடத்தினார். “கடவுள்களை அழைக்கவும் அவர்களின் ஆசீர்வாதங்களைப் பெறவும் நான் இங்கு வந்துள்ளேன்” என்று அப்போது அனந்த் அம்பானி கூறினார்.
இந்த வருகைகள் ஆனந்த் அம்பானியின் ஆன்மீக நடைமுறைகளுக்கான அர்ப்பணிப்பையும், வாழ்க்கையின் குறிப்பிடத்தக்க தருணங்களில் தெய்வீக ஆசீர்வாதங்களைப் பெறுவதன் முக்கியத்துவத்தையும் காட்டுகின்றன.
April 01, 2025 12:19 PM IST

