இந்நிலையில், மத போதகரான பாகேஷ்வர் பாபா எனும் தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி, இந்த மரணம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தற்போது இந்தியாவில், நீல நிற டிரம் (drum) தான் பிரபலமாக உள்ளது. பல கணவர்களும் அச்சத்தில் உள்ளனர். நான் திருமணம் செய்துகொள்ளவில்லை. அதற்கு கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்” எனக் கூறிவிட்டுத் தொடர்ந்து பேசினார்.
அப்போது அவர், “மீரட் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. குடும்ப அமைப்பு சீரழிந்து வருகிறது. மேற்கத்திய கலாச்சாரத்தின் வருகை மற்றும் திருமணமான ஆண், பெண் இருபாலரும் கொள்ளும் திருமணத்தை மீறிய விருப்பங்கள் உள்ளிட்டவை குடும்பங்களை அழித்து வருகின்றன.
இதையும் படியுங்கள் : நள்ளிரவில் ரோந்து சென்ற போலீசார் கண்ட அந்த காட்சி… அடுத்த நொடி நடந்த கொடூர சம்பவம்!
ஒருவரின் மகனோ அல்லது மகளோ இப்படியான செயல்களில் ஈடுபடுவது முறையற்ற வளர்ப்பையே குறிக்கிறது. எனவே, ஒரு பண்பட்ட குடும்பத்தை உருவாக்க, ஒவ்வொரு இந்தியனும் ஸ்ரீ ராமசரிதமானஸை அடிப்படையாகக் கொள்வது அவசியம்” எனப் பேசினார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட்டைச் சேர்ந்த கடற்படை அதிகாரியான சவுரவ் ராஜ்புட், பணி நிமித்தமாக லண்டன் சென்றிருந்தார். அவரது மனைவியின் பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்த சவுரவ், லண்டனில் இருந்து, முன்னறிவிப்பின்றி, கடந்த 4-ஆம் தேதி மீரட்டிற்கு வந்தார். ஆனால், அவரது மனைவியான மஸ்கன், சாஹில் என்ற இளைஞருடன் தகாத உறவில் இருந்தார்.
#WATCH | Meerut, UP | On the Meerut murder case, Bageshwar Dham’s Dhirendra Shastri said, “The Meerut case is unfortunate. In the present society, the declining family system, the advent of Western culture and married men or women engaged in affairs are destroying families…… pic.twitter.com/ULalTXvTj5
— ANI (@ANI) March 27, 2025
அப்போது ஏற்பட்ட மோதலில், மஸ்கன் மற்றும் சாஹில் இணைந்து, கடற்படை அதிகாரியைக் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி, டிரம்மிற்குள் (DRUM) அடைத்து சிமெண்ட் போட்டு பூசி விட்டு, தலைமறைவாகிவிட்டனர்.
15 நாட்களுக்குப் பிறகு, வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வருவதாக அக்கம்பக்கத்தினர் புகார் அளித்ததன் அடிப்படையில், சவுரவின் உடலை அழுகிய நிலையில் காவலர்கள் கண்டெடுத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய காவல் துறையினர், தலைமறைவாக இருந்த மஸ்கன் மற்றும் சாஹிலை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
March 27, 2025 8:15 PM IST
கடவுளுக்கு நன்றி, எனக்கு திருமணம் ஆகல…கணவரை கொன்று டிரம்மில் அடைத்த மனைவி விவகாரத்தில் பாகேஷ்வர் பாபா கருத்து

