பெந்தரை கடற்கரையில் நீரில் மூழ்கி காணாமல் போன இந்தியர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலமானது, இன்று(14) காலை மொரகல்லா கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பெந்தரை பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் நண்பருடன் தங்கியிருந்த 24 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
குறித்த நபர் விடுதிக்குப் பின்னாலுள்ள கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தபோது, கடல் நீரோட்டத்தில் சிக்கி காணாமல் போனதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அலுத்கம காவல்துறையினர் மற்றும் அலுத்கம சுற்றுலா காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

