இதனால் எதிர்காலத்தில் கடன் வாங்குவது மிகவும் கடினமாகிவிடும். மேலும், வங்கிகளும் கடன் வழங்குநர்களும் உங்களை ஒரு ஆபத்தான கடனாளியாக பார்க்கத் தொடங்குவார்கள். கடனுக்கு விண்ணப்பித்தால் நிராகரிப்புகளைச் சந்திக்கலாம் அல்லது அதிக வட்டி விகிதங்களைச் செலுத்தும்படி கேட்கப்படலாம் அல்லது ஒப்புதல் பெற கூடுதல் ஆவணங்கள் மற்றும் உத்தரவாதங்களை வழங்க வேண்டி இருக்கும்.
குறைந்த கிரெடிட் ஸ்கோர் இருந்தால் எதுவும் கிடைக்காது என நினைக்காதீர்கள். காலப்போக்கில் நிலையான பழக்கவழக்கங்கள் மூலமும் ஒழுக்கத்தின் மூலமும் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்தலாம். உங்கள் கடன் ஆரோக்கியத்தில் நீங்கள் எவ்வளவு சீக்கிரம் வேலை செய்யத் தொடங்குகிறீர்களோ, அவ்வளவு சீக்கிரம் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
உடனடி மீட்பு நடவடிக்கைகள் என்ன?
நிலுவையில் உள்ள கடன் தொகைகளை குறைக்கவும்
நிலுவையில் உள்ள தொகையை செலுத்துங்கள் அல்லது தீர்வைப் பெற வங்கியாளரிடம் பேச்சுவார்த்தை நடத்துங்கள். இது உங்கள் கிரெடிட்டை பாதித்தாலும், நீண்டகால சேதத்தை குறைக்கிறது.
உங்கள் கடனை மறுசீரமைக்கவும்
இஎம்ஐ செலுத்துவதில் சிக்கல் இருப்பதாக நீங்கள் நினைத்தால், உங்கள் கடன் வழங்குநரிடம் கடனை மறுசீரமைக்குமாறு கேளுங்கள். ஒருவேளை நீண்ட கால அவகாசம் அல்லது குறைந்த இஎம்ஐ ஆப்ஷனை கேளுங்கள். இது ஆரம்பத்தில் உங்கள் கிரெடிட் மதிப்பெண்ணை குறைத்தாலும், நிலையான திருப்பிச் செலுத்துதல்கள் மூலம் படிப்படியாக அதை மீட்டெடுக்கலாம்.
காலப்போக்கில் உங்கள் கிரெடிட் ஸ்கோரை மீண்டும் அதிகரிப்பதற்கான படிகள்:
அனைத்து பில்களையும் இஎம்ஐ-களையும் சரியான நேரத்தில் செலுத்துங்கள்
உங்கள் கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்க உதவும் மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று சரியான நேரத்தில் பணம் செலுத்துதல். மீண்டும் நிலுவைத் தேதியைத் தவறவிடாமல் இருக்க நினைவூட்டல்களை அமைக்கவும் அல்லது ஆட்டோமெட்டிக் செட்டிங்ஸை பயன்படுத்தவும்.
உங்கள் கார்டுகளின் முழு கடன் வரம்பையும் பயன்படுத்த வேண்டாம். உங்கள் வரம்பிலிருந்து 30 சதவீதத்திற்குள் செலவு செய்வது, நீங்கள் கடனை சிறப்பாக நிர்வகிக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. இது உங்கள் கிரெடிட் மதிப்பெண்ணுக்கு உதவுகிறது.
பாதுகாக்கப்பட்ட கடன் அட்டை அல்லது சிறிய கடனைப் பயன்படுத்துங்கள்.
சிறிய அளவிலான கிரெடிட்டைப் பயன்படுத்தத் தொடங்குங்கள். ஆனால், சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களிடம் குறைந்த கிரெடிட் ஸ்கோர் இருந்தால், நிலையான வைப்புத்தொகையுடன் கூடிய பாதுகாக்கப்பட்ட கிரெடிட் கார்டு சிறந்த வழியாகும்.
ஒரே நேரத்தில் பல கடன்களுக்கு விண்ணப்பிப்பதைத் தவிர்க்கவும்
நீங்கள் கடனுக்கு விண்ணப்பிக்கும் ஒவ்வொரு முறையும், கடன் வழங்குபவர்கள் உங்கள் கிரெடிட் ஸ்கோரை சரிபார்க்கிறார்கள். அதிகபடியான விண்ணப்பங்கள் நீங்கள் கடனுக்காக ஏங்குவதுபோல் தோன்றச் செய்யலாம். இது உங்கள் மதிப்பெண்ணைப் பாதிக்கிறது.
கடன் அறிக்கைகளில் தவறுகள் ஏற்படுவது சகஜம். உங்கள் அறிக்கையை சரிபார்த்து, ஏதேனும் தவறான தகவலைக் கண்டால், அதை உடனடியாக வங்கியிடம் தெரிவிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
July 29, 2025 12:30 PM IST
கடன் தவணை தொகையை செலுத்த தவறிவிட்டீர்களா…? உங்க கிரெடிட் ஸ்கோரை அதிகப்படுத்த வழிமுறைகள் இதோ…