வாங்கிய கடன்களை சரியான நேரத்தில் திருப்பி செலுத்துவது உங்களுடைய கிரெடிட் ரிப்போர்ட்டை சரியாக பராமரிப்பதற்கு உதவும். ஒரு சில கடன் பெறுநர்கள் அட்டவணைக்கு முன்பாகவே கடனை திருப்பி செலுத்தி விட வேண்டும் என்று கருதுவர். அட்டவணைக்கு முன்பாகவே கடனை திருப்பி செலுத்துவதற்கு கவனமான திட்டமிடல் மற்றும் பொருளாதார மேலாண்மை தேவைப்படுகிறது. உங்கள் கடனை விரைவாக எப்படி திருப்பி செலுத்துவது என்பது சம்பந்தப்பட்ட சில குறிப்புகளை இப்பொழுது பார்க்கலாம்.
கடன் ஒருங்கிணைப்பு:
நீங்கள் பல்வேறு கடன்களை வாங்கி இருந்தால் அதற்கான வட்டி விகிதம் விலை உயர்ந்ததாகவும் அதனை அடைப்பதற்கு அதிக நாட்கள் அல்லது மாதங்கள் எடுத்துக் கொள்ளும் என்பதால் பொருளாதாரத்தை சமாளிப்பது உங்களுக்கு சிரமமாக இருக்கலாம். எனவே உங்களுடைய அனைத்து கடன்களையும் ஒரே தொகையாக மாற்றி நிலையான ஒரு வட்டி விகிதத்தில் பெற்றுக் கொள்வதன் மூலமாக மாதா மாதம் நீங்கள் அந்த கடனை எளிதாக அடைத்து வரலாம்.
மறு நிதி அளிப்பு:
நல்ல வட்டி விகிதம் வழங்க கூடிய வேறு ஒரு கடன் வழங்குனருக்கு உங்களது கடனை மாற்றுவது ஒரு சிறந்த ஆப்ஷனாக அமைகிறது. நிலுவையில் உள்ள மொத்த கடன் தொகையை மற்றொரு ஹோம் லோன் ஃபைனான்ஸ் நிறுவனத்திற்கு மாற்றி விடுவதன் மூலமாக நீங்கள் குறைவான வட்டி விகிதத்தை பெறலாம் அல்லது அசல் கடன் தொகையோடு கூடுதல் பணத்தை கடனாக பெறுவதற்கான வாய்ப்பை பெறுவீர்கள்.
முன்கூட்டியே அடைத்து விடுதல்:
உங்களிடம் பெரிய அளவில் கையில் பணம் இருக்கும் பொழுது குறிப்பிட்ட தொகையை லம்பாக கட்டி விடுவதன் மூலம் உங்களுடைய EMI தொகை மற்றும் லோனை திருப்பி செலுத்துவதற்கான கால அளவு குறையும். ஆனால் இவ்வாறு நீங்கள் செலுத்தும் பொழுது நீங்கள் முன்கூட்டியே செலுத்திய அந்த முதல் தொகைக்கு நீங்கள் அதிகமாக வட்டி செலுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
கூடுதல் பேமெண்ட்களை செலுத்துதல்:
ஒருவேளை உங்களால் முடிந்தால் முதல் தொகையை பெரிய அளவிலான பேமெண்ட்களாக செலுத்தி விரைவாக குறைத்து விடுவதன் மூலமாக மொத்த தொகையை நீங்கள் குறைக்கலாம். முதல் தொகையை குறைப்பதன் மூலமாக நீங்கள் லோனை திருப்பி செலுத்துவதற்கான கால அளவையும், வட்டியையும் குறைக்கிறீர்கள்.
உங்களுடைய EMI சதவீதத்தை அதிகப்படுத்துதல்: உங்களுடைய சேமிப்புத் திறனின் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் நீங்கள் செலுத்தி வரும் EMI தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை அதிகரிப்பது கடனை விரைவாக திருப்பி செலுத்துவதற்கு உதவும். இது ஒவ்வொரு நபரின் பொருளாதார சூழ்நிலைகளை பொறுத்து அமையும்.
Follow @ WhatsApp :
வாட்ஸ் அப் -ல்
நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை பெற
இங்கே
கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கடனை திருப்பி செலுத்துவதற்காக கால அளவு அட்டவணை முடிவதற்கு முன்பே உங்கள் கடனை திருப்பி செலுத்துவதன் மூலமாக உங்களுடைய பொருளாதார சுமை குறைகிறது. எனினும் இதனை நீங்கள் செய்யும் பொழுது உங்களுடைய பொருளாதார சூழ்நிலையை மனதில் வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும். அதோடு முன்கூட்டியே நீங்கள் கடனை மூடி விடுவதால் உங்களுக்கு விதிக்கக்கூடிய கட்டணங்கள், அபராதங்கள் ஏதேனும் இருக்கிறதா என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்வதும் அவசியம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
