அமெரிக்க அரசாங்கத்தின் மொத்த தேசிய கடன் 34 டிரில்லியன் டாலர்களை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் இருப்புநிலையை மேம்படுத்துவதற்கு, எதிர்வரும் ஆண்டுகளில் அரசாங்கம் அரசியல் மற்றும் பொருளாதார முன்னணியில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை இந்த கடன் நிலை காட்டுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்க நிதித் துறை அந்நாட்டின் நிதி நிலை குறித்த அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது. அரசியல் ரீதியாக பிளவுபட்டுள்ள நாட்டிற்கு இது பதற்றத்தை ஏற்படுத்தப் போவதாக கூறப்படுகிறது. அறிக்கையின்படி, ஆண்டு பட்ஜெட் இல்லாமல், அரசாங்கத்தின் சில பகுதி பணிகள் ஸ்தம்பிக்கக்கூடும் எனவும் தெரிகிறது.
அமெரிக்காவின் தேசிய கடன் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக அதிகரித்துள்ளதாக அறிக்கை காட்டுகிறது. 2020ஆம் ஆண்டு ஜனவரியில், மொத்த கூட்டாட்சிக் கடன் 2028-29 நிதியாண்டில் $34 டிரில்லியனை எட்டும் என்று Congressional Budget Office மதிப்பிட்டுள்ளது. ஆனால் 2020-ல் தொடங்கிய கோவிட் பெருந்தொற்று நோய் காரணமாக, கடன் எதிர்பார்த்ததை விட பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த அளவை எட்டியுள்ளது.
தற்போது அமெரிக்க பொருளாதாரத்தில் எந்த சுமையும் இருப்பதாக தெரியவில்லை எனவும் கூறப்படுகிறது, ஏனெனில் முதலீட்டாளர்கள் மத்திய அரசுக்கு கடன் கொடுக்க தயாராக உள்ளனர். இந்த கடன் வரிகளை உயர்த்தாமல் திட்டங்களுக்கு செலவழிக்க அரசாங்கத்தை அனுமதிக்கிறது. இருப்பினும், இந்த கடன் பாதை தேசிய பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் போன்ற பல முக்கிய திட்டங்களை வரும் ஆண்டுகளில் ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Also Read |
கல்யாண செலவு ரூ.491 கோடி… அரண்மனையில் கொண்டாட்டம்… இந்தியாவே திரும்பி பார்த்த அடடே திருமணம்!
ஜப்பான் மீதான மிகப்பெரிய கடன், டாலர் அல்லது நிதி அடிப்படையில் பார்த்தால், அமெரிக்காவின் மிகப்பெரிய தேசிய கடனாகும். ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதத்தில் பார்த்தால், உலகின் வளர்ந்த நாடுகளில் அதிக கடனைக் கொண்ட நாடு ஜப்பான். ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் 260 சதவீதம் கடன் உள்ளது. அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில், 121 சதவீதம் கடன் உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…