• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கடனாக வாங்கிய 8000 ரூபாயில் முதலீடு.. இப்போ ரூ.600 கோடிக்கு சொத்து.. யார் இவர்?

GenevaTimes by GenevaTimes
April 3, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
கடனாக வாங்கிய 8000 ரூபாயில் முதலீடு.. இப்போ ரூ.600 கோடிக்கு சொத்து.. யார் இவர்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிசினஸ் உலகில் பெண் தொழில்முனைவோர்கள் முன்னெப்போதையும் விட அதிக உயரங்களை தொட்டு வருகிறார்கள். தங்களது மன உறுதி, அர்ப்பணிப்பு, புதுமையான யோசனைகள் மூலம் பல தடைகளை தாண்டி வெற்றிகரமான நிறுவனங்களை பல பெண்கள் உருவாக்கி வருகிறார்கள். இந்தப் பெண்கள் வெறும் தொழிலதிபர்களாக மட்டுமல்லாமல் பலருக்கும் உந்துசக்தியாகவும் இருக்கிறார்கள். வெறும் ரூ.8,000 முதலீட்டில் தொடங்கிய நிறுவனத்தை பல கோடி மதிப்பிலான நிறுவனமாக மாற்றிய மீனா பிந்த்ரா பற்றியே இன்று பார்க்கப் போகிறோம்.

மீனா பிந்த்ரா தொடங்கிய Biba Apparels என்ற பெண்களுக்கான ஆடை நிறுவனம், இந்திய பேஷன் பிராண்டில் முன்னனி நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. டெல்லி பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்த பிந்த்ரா, 20 வயதிலேயே திருமணம் செய்து கொண்டார். தன்னுடைய 40-வது வயதில் எந்தவித முன் அனுபவமோ முறையான பயிற்சியும் இன்றி வீட்டிலிருந்தபடியே எளிமையான பருத்தியிலான ஆடைகளை விற்பனை செய்யத் தொடங்கினார் மீனா பிந்த்ரா.

விளம்பரம்

News18

Biba Apparels நிறுவனத்தை பல சிரமங்களுக்கு இடையே தான் இவர் தொடங்கினார். நிறுவனத்தை நடத்துவதற்கு இவரிடம் போதுமான பணம் இல்லை. சொல்லப்போனால் இவரிடம் சொந்தமாக வங்கி கணக்கு கூட கிடையாது. ஆனால் இவரது கணவர் வங்கியிலிருந்து ரூ.8,000 கடன் வாங்கி கொடுத்தார். இந்த தொகையை முதலீடாக வைத்துதான் தனது நிறுவனத்தை தொடங்கினார் மீனா. இப்படிதான் 1988-ம் ஆண்டு BIBA பிறந்தது.

2004-ம் ஆண்டு தனது முதல் கடையை மும்பையில் உள்ள மாலில் BIBA திறந்தது. 2012-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் BIBA நிறுவனத்தின் ஆண்டு வருமானம் ரூ.300 கோடியை எட்டியது. தொடர்ந்து இவர்களுடைய பிராண்ட் மக்களிடம் வரவேற்பை பெற்று வந்ததால், 2020-ம் ஆண்டில் இவர்களின் ஆண்டு வருமானம் ரூ.600 கோடியாக அதிகரித்தது.

விளம்பரம்
சொந்த தொழில் நடத்தும் தமிழ் சினிமா பிரபலங்கள்..


சொந்த தொழில் நடத்தும் தமிழ் சினிமா பிரபலங்கள்..

இத்தனை வருடங்களில் பேஷன் துறையில் பல அசாத்திய வளர்ச்சியை BIBA கண்டுள்ளது. இன்று இந்தியா முழுவதும் இவர்களுக்கு 76 நகரங்களில் 180 கடைகள் சொந்தமாக உள்ளது. இதுதவிர 275 மல்டி பிராண்ட் கடைகளிலும் இவர்களின் ஆடைகள் விற்கப்படுகின்றன.

2015-ம் ஆண்டு மதிப்பு வாய்ந்த CMAI Apex விருது விழாவில் இந்த வருடத்திற்கான சிறந்த இந்திய பெண்கள் ஆடையகம் என்ற விருதை BIBA பெற்றது. இந்த பிராண்டின் அடையாளமாக இருக்கும் மீனா பிந்த்ரா, பொருட்களின் தரம், குறைவான நேரத்தில் டெலிவரி, கொடுத்த பணத்திற்கு ஈடான மதிப்பு போன்றவை காரணமாக மக்களின் மனதில் தனித்து நிற்கிறது BIBA.

விளம்பரம்

Also read |
இவரது ஷூக்கள் மட்டும் ரூ. 20 லட்சம்!! இணையத்தில் அதிகம் தேடப்பட்ட பெண் தொழிலதிபரை தெரிந்து கொள்ளுங்கள்…

மீனா பிந்த்ரா பல பிரபலமான பாலிவுட் படங்களில் ஆடை அலங்காரப் பிரிவிலும் பணியாற்றியுள்ளார். அமிதாப் பச்சன் நடித்த Baghban மற்றும் ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ள Na Tum Jaano Na Hum திரைப்படத்திற்கும் ஆடை வடிவமைப்பாளராக மீனா பணிபுரிந்துள்ளார். இந்தியாவின் பணக்கார பெண்மணியாக திகழும் மீனா பிந்த்ராவின் தற்போதைய சொத்து மதிப்பு எவ்வுளவு தெரியுமா? சுமார் ரூ.710 கோடி.

விளம்பரம்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

KKR vs DC Preview: ஹாட்ரிக் வெற்றியை குறிவைக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-சிஎஸ்கேவை வீழ்த்திய உற்சாகத்தில் டெல்லி!

Next Post

தைவான் நில நடுக்கம்: 2 மலேசியர்கள் அதிர்ஷடவசமாக உயிர் தப்பினர் | Makkal Osai

Next Post
தைவான் நில நடுக்கம்: 2 மலேசியர்கள் அதிர்ஷடவசமாக உயிர் தப்பினர் | Makkal Osai

தைவான் நில நடுக்கம்: 2 மலேசியர்கள் அதிர்ஷடவசமாக உயிர் தப்பினர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin