Last Updated:
முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது 2025-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ஒட்டுமொத்த வன்முறை 46 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக, ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆய்வுகள் மையம் (CRSS) தெரிவித்துள்ளது.
அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த மூன்று மாதங்களாக தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து காணப்படுவதாலும், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்திருப்பதாலும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது 2025ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ஒட்டுமொத்த வன்முறை 46 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக, ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆய்வுகள் மையம் (CRSS) தெரிவித்துள்ளது. பொதுமக்கள், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் தீவிரவாதிகள் உட்பட இறந்தவர்களின் எண்ணிக்கையில் 46 சதவீதம் அதிகரிப்பு பதிவாகி இருப்பதாகவும், நடப்பாண்டு கடந்த 2024ஆம் ஆண்டைவிட கொடியதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் ராணுவம் நாட்டின் மேற்கு எல்லையில் போராளிக் குழுக்களுடன் சண்டையிடுகிறது. தவிர அந்த நாட்டின் வடமேற்கில் பாகிஸ்தானிய தலிபான்களும், தென்மேற்கில் பலூச் பிரிவினைவாத குழுக்களும் பெரும்பான்மையான தாக்குதல்களுக்கு பின்னணியில் உள்ளன. தீவிரவாதத்துடன் தொடர்புடைய வன்முறை பாகிஸ்தானில் பெருகியுள்ளது என்பது ‘தீவிரவாத சம்பவங்கள் அதிகரித்துள்ளதையும் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்பை விட தீவிரப்படுத்தப்பட்டுள்ளதையும் வெளிப்படுத்துகிறது” என்று CRSS கூறியுள்ளது.
குறிப்பாக கடந்த 2021-ஆம் ஆண்டு பாகிஸ்தானின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையிலான துருப்புக்கள் திரும்ப பெறப்பட்டதில் இருந்து தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. தலிபான் அதிகாரிகள் தங்களுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாக பாகிஸ்தான் அரசு குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டை தலிபான்கள் மறுத்துள்ளனர். எனினும், ஆப்கானிஸ்தானில் போராளிக் குழுக்களுக்கு “அனுமதியளிக்கும் சூழல்” இருப்பதாக ஐ.நா. சபை எச்சரித்துள்ளது.
பாகிஸ்தான் தாலிபான் போராளிகளின் நடவடிக்கை சமீபத்திய மாதங்களில் அதிகரித்துள்ளதாக, பெயர் வெளியிட விரும்பாத அரசு அதிகாரி ஒருவர் கடந்த செப்டம்பர் மாதம் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். ஆனால் இதே மாதத்தில், எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பாகிஸ்தான் ராணுவம் தீவிரவாதிகளின் மறைவிடங்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியதில் பல அப்பாவி குழந்தைகளும் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டினர்.
நடப்பாண்டின் மூன்றாம் காலாண்டின் இறுதிக்குள், பாகிஸ்தானில் தீவிரவாதம் சார்ந்த 2,414 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. இது 2024ஆம் ஆண்டு முழுவதும் பதிவான 2,546 இறப்புகளை கிட்டத்தட்ட நெருங்கியுள்ளது. அதேநேரம் நடப்பாண்டில் மூன்றாம் காலாண்டில் உயிரிழந்த 901 பேரில், சுமார் 57 சதவீதம் பேர் தீவிரவாதிகள், அதே நேரத்தில் 385 பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரும் கொல்லப்பட்டனர்.
October 08, 2025 4:25 PM IST
கடந்த 3 மாதங்களில் பாகிஸ்தானில் தீவிரவாதம் தொடர்புடைய வன்முறை 46% அதிகரிப்பு…! காரணம் என்ன தெரியுமா…?