• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கடந்த சீசனிலேயே கலீல் அஹ்மத் ரிலீஸ் கேட்டார்.. குண்டை தூக்கி போட்ட அஸ்வின்.. அதிர்ச்சியில் சிஎஸ்கே! | CSK: Ashwin Reveals Khaleel Ahmed Sought Exit from CSK Ahead of Previous IPL Season

GenevaTimes by GenevaTimes
August 7, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
கடந்த சீசனிலேயே கலீல் அஹ்மத் ரிலீஸ் கேட்டார்.. குண்டை தூக்கி போட்ட அஸ்வின்.. அதிர்ச்சியில் சிஎஸ்கே! | CSK: Ashwin Reveals Khaleel Ahmed Sought Exit from CSK Ahead of Previous IPL Season
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Cricket

oi-Yogeshwaran Moorthi

Time
Updated: Friday, August 7, 2026, 8:58 [IST]

சென்னை: சிஎஸ்கே அணியில் இருந்து நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் கலீல் அஹ்மத் கடந்த சீசனுக்கு முன்பாகவே ரிலீஸ் கேட்டதாக அஸ்வின் பேசி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சீசனின் 5 போட்டிகளில் மட்டுமே ஆடிய கலீல் அஹ்மத் காயம் காரணமாக வெளியேறினார். இதனால் கலீல் அஹ்மத் சிஎஸ்கே அணியுடன் பயணிக்க விரும்பாதது பேசு பொருளாகி இருக்கிறது.

கடந்த சில வாரங்களாகவே சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான டிரேட் பேச்சுவார்த்தை குறித்து பல்வேறு தகவல் வெளியாகி வருகிறது. ஹர்திக் பாண்டியா சிஎஸ்கே வருவது கிட்டத்தட்ட உறுதி என்று பலரும் பேசி வந்த நிலையில், நேஏற்று திடீரென ஹர்திக் பாண்டியா கேகேஆர் அணியின் கேப்டனாக அந்த அணியில் இணைய உள்ளதாக பேச்சுகள் எழுந்தன.

CSK Ashwin Khaleel Ahmed

அதேபோல் ராஜஸ்தான் அணியும் ஜெய்ஸ்வாலை விட்டுக் கொடுத்துவிட்டு ஹர்திக் பாண்டியாவை வாங்க ஆர்வம் காட்டுவதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா டிரேட் விவகாரம் தொடர்பாக அஸ்வின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அஸ்வின் பேசுகையில், மும்பை அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா வெளியேறுவது அனைவருக்கும் தெரிந்த ரகசியம் தான்.

அந்த விஷயத்தில் மறைக்க எதுவும் இல்லை. ஆனால் ஹர்திக் பாண்டியா சிஎஸ்கே அணிக்கு வருகிறாரா என்பது தான் சந்தேகம். ஏனென்றால் டிரேட் டீல் என்பது கடைசி நொடியில் கூட மாறக் கூடிய ஒன்று.. பஞ்சாப் அணியின் கேப்டனாக இருக்கும் போது ஷிகர் தவானை நாங்கள் கிட்டத்தட்ட வாங்கிவிட்டோம். ஆனால் 24 மணி நேரத்தில் டெல்லி அணி உள்ளே புகுந்து மொத்தமாக மாற்றிவிட்டது.

அபிஷேக் சர்மா, நதீம் உள்ளிட்ட 3 வீரர்களை கொடுத்துவிட்டு தவானை பெற்றுவிட்டனர். அதனால் டிரேட் டீல் முடிவடையும் வரை இந்த வீரர் எந்த அணிக்கு செல்வார் என்பதை கணிக்க முடியாது. சிஎஸ்கே அணியில் சிவம் துபே மற்றும் கலீல் அஹ்மத் ஆகியோரை மும்பை அணி கேட்டிருக்கிறது. சிஎஸ்கே அணி சிவம் துபேவை கடந்த 3 சீசன்களாகவே முறையாக பயன்படுத்தவில்லை.

ஒருவேளை சிஎஸ்கே அணியில் இருந்து சிவம் துபே டிரேட் செய்யப்பட்டால், அவர் ஒரு பீஸ்ட் மோடில் ஆடுவார். இந்தியாவில் சிவம் துபே போன்ற வீரர்களுக்கு மிகப்பெரிய மதிப்பு உள்ளது. இடதுகை பேட்ஸ்மேன் என்பதோடு, ஸ்பின்னர்களை பதம் பார்க்க கூடியவர். அதனால் சிவம் துபேவை சிஎஸ்கே அணி இழக்க கூடாது என்பதே என்னுடைய எண்ணம்.

கலீல் அஹ்மத் கடந்த சீசனுக்கு முன்பாகவே ரிலீஸ் செய்ய கோரிக்கை வைத்திருந்தார். அது ஏன் என்பது தெரியவில்லை. அதனால் இந்த சீசனுக்கு முன் கலீல் அஹ்மத்தை டிரேட் செய்ய சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்யலாம். ஏனென்றால் இந்திய இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஏலத்திற்கு சென்றால், மிகப்பெரிய மதிப்பு இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

கலீல் அஹ்மத் சிஎஸ்கே அணியில் இருந்து ரிலீஸ் கேட்டிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சீசனிலேயே கலீல் அஹ்மத் சிறந்த ஃபார்மில் இருந்தார். ஆனால் பாதி சீசனிலேயே காயம் காரணமாக கலீல் அஹ்மத் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் இந்த சீசனில் கலீல் அஹ்மத் வெளியேறுவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.

English summary

CSK: Ashwin Reveals Khaleel Ahmed Sought Exit from CSK Ahead of Previous IPL Season

Read More

Previous Post

ஓகஸ்ட் மாத லிட்ரோ மற்றும் லாஃப் எரிவாயு விலைகளில் மாற்றம் இல்லை – Sri Lanka Tamil News

Next Post

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் : அமெரிக்காவின் அழுத்தமே காரணமா? அதிர்ச்சி ரிப்போர்ட்..!! | Will UPI Charges Return? GTRI Warns India Against Changing Policy Under US Pressure

Next Post
UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் : அமெரிக்காவின் அழுத்தமே காரணமா? அதிர்ச்சி ரிப்போர்ட்..!! | Will UPI Charges Return? GTRI Warns India Against Changing Policy Under US Pressure

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் : அமெரிக்காவின் அழுத்தமே காரணமா? அதிர்ச்சி ரிப்போர்ட்..!! | Will UPI Charges Return? GTRI Warns India Against Changing Policy Under US Pressure

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin