Last Updated:
ஜூலை மாத மொத்த ஜிஎஸ்டி வசூல் கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாட்டின் ஜூலை மாத மொத்த ஜிஎஸ்டி வசூல் கடந்த ஆண்டை விட 15.4 சதவீதம் அதிகரித்து 2 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாயைக் கடந்துள்ளது.
இதுகுறித்து சரக்கு மற்றும் சேவை வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்நாட்டு பரிவர்த்தனைகள் மற்றும் இறக்குமதி மூலம் கிடைத்த அதிக வசூல் காரணமாக, ஜூலை மாத மொத்த ஜிஎஸ்டி வசூல் கணிசமாக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அதன்படி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒரு லட்சத்து 83 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த மொத்த ஜிஎஸ்டி வசூல், கடந்த ஜூலை மாதம் 15.4 சதவீதம் அதிகரித்து 2 லட்சத்து 11 ஆயிரம் கோடியைக் கடந்துள்ளது. குறிப்பாக, உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலம் வசூல் செய்யப்பட்ட ஜிஎஸ்டி 10.1 சதவீதம் அதிகரித்து ஒரு லட்சத்து 44 ஆயிரம் கோடியாகவும், இறக்குமதி மூலம் வசூல் செய்யப்பட்ட ஜிஎஸ்டி 29 சதவீதம் அதிகரித்து 66 ஆயிரத்து 511 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, ஹரியானா, தெலங்கானா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வலுவான வளர்ச்சியை எட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ள மத்திய அரசு, தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி வசூல் ஒரு சதவீதம் குறைந்து 10 ஆயிரத்து 414 கோடி ரூபாயாக இருந்ததாகத் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டை விட 15.4% அதிகரித்த ஜிஎஸ்டி வசூல்… நாட்டின் ஜூலை மாத மொத்த ஜிஎஸ்டி வசூல் எவ்வளவு தெரியுமா? | GST


