• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கடந்த ஆண்டு மே மாதத்தை விட 16.4% அதி​கமாக ரூ.2 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல் | GST tax collection of Rs. 2 lakh crore

GenevaTimes by GenevaTimes
June 2, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
கடந்த ஆண்டு மே மாதத்தை விட 16.4% அதி​கமாக ரூ.2 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல் | GST tax collection of Rs. 2 lakh crore
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: கடந்த மே மாதத்தில் ரூ.2.01 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டு இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் சார்பில் 17 வகையான வரிகள், 13 வகையான செஸ் வரிகள் விதிக்கப்பட்டு வந்தன. இதற்கு பதிலாக கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி ஜிஎஸ்டி வரி அமல் செய்யப்பட்டது. கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ.2.1 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டது. மே மாதம் ரூ.1.73 லட்சம் கோடி, ஜூன் மாதம் ரூ.1.74 லட்சம் கோடி, ஜூலையில் ரூ.1.82 லட்சம் கோடி, ஆகஸ்டில் ரூ.1.75 லட்சம் கோடி, செப்டம்பரில் ரூ.1.73 லட்சம் கோடி, அக்டோபரில் ரூ.1.87 லட்சம் கோடி, நவம்பரில் ரூ.1.77 லட்சம் கோடி, டிசம்பரில் ரூ.1.77 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டது.

நடப்பாண்டு ஜனவரியில் ரூ.1.96 லட்சம் கோடி, பிப்ரவரியில் ரூ.1.84 லட்சம் கோடி, மார்ச் மாதம் ரூ.1.96 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூலானது. கடந்த ஏப்ரல் மாதம் இதுவரை இல்லாத அளவாக ரூ.2.37 லட்சம் கோடியை தொட்டது. இந்த சூழலில் கடந்த மே மாதம் ரூ.2.01 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டு உள்ளது.

இது கடந்த ஆண்டு மே மாதத்தை ஒப்பிடும்போது 16.4 சதவீதம் அதிகம் ஆகும். மே மாதத்தில் உள்ளூர் பரிவர்த்தனைகள் மூலமாக ரூ.1.9 லட்சம் கோடியும், இறக்குமதி பொருட்கள் மூலமாக ரூ.46,913 கோடியும் ஜிஎஸ்டி வரி வருவாய் கிடைத்திருக்கிறது.

இதுகுறித்து பொருளாதார நிபுணர்கள் கூறும்போது, “ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் குறு, சிறு, நடுத்தர, கார்பரேட் நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை வழங்கி பொருட்களை விற்பனை செய்யும். இதன்காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் சாதனை அளவாக ரூ.2.37 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் கிடைத்தது. கடந்த மே மாதத்திலும் கணிசமான அளவு ஜிஎஸ்டி வரி வருவாய் கிடைத்திருக்கிறது. இது இந்திய பொருளாதாரம் வலுவாக இருப்பதை உறுதி செய்கிறது” என்று தெரிவித்தனர்.



Read More

Previous Post

இந்தியா ஏ அணிக்கெதிரான டெஸ்ட்: இங்கிலாந்து லயன்ஸ் ரன் குவிப்பு | england lions cores runs in test match against india a

Next Post

உக்ரைன் ராணுவத்தின் ட்ரோன் தாக்குதலில் ரஷ்யாவின் 40 போர் விமானங்கள் அழிப்பு | 40 Russian warplanes destroyed in Ukrainian military drone attack

Next Post
உக்ரைன் ராணுவத்தின் ட்ரோன் தாக்குதலில் ரஷ்யாவின் 40 போர் விமானங்கள் அழிப்பு | 40 Russian warplanes destroyed in Ukrainian military drone attack

உக்ரைன் ராணுவத்தின் ட்ரோன் தாக்குதலில் ரஷ்யாவின் 40 போர் விமானங்கள் அழிப்பு | 40 Russian warplanes destroyed in Ukrainian military drone attack

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin