• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கடத்தப்பட்ட 6 பேர் உடல்கள் மீட்பு: மணிப்பூரில் பதற்றம் அதிகரிப்பு – நடப்பது என்ன? | Bodies of 6 Abductees Recovered and Tensions Rise on Manipur

GenevaTimes by GenevaTimes
November 17, 2024
in இந்தியா
Reading Time: 5 mins read
0
கடத்தப்பட்ட 6 பேர் உடல்கள் மீட்பு: மணிப்பூரில் பதற்றம் அதிகரிப்பு – நடப்பது என்ன? | Bodies of 6 Abductees Recovered and Tensions Rise on Manipur
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இம்பால்: மணிப்​பூரில் ஆயுதம் தாங்கிய குகி தீவிர​வா​தி​களால் கடத்​தப்​பட்​டதாக கூறப்​படும் மைதேயி இனத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 6 பேரின் உடல்கள் அழுகிய நிலை​யில் கண்டு​பிடிக்​கப்​பட்டது பதற்​றத்தை அதிகரித்துள்ளது. ஜிரிபாம் உள்ளிட்ட 5 மாவட்​டங்​களில் பள்ளி, கல்லூரி​களுக்கு விடு​முறை அறிவிக்​கப்​பட்​டது. ஊரடங்கு உத்தரவு பிறப்​பிக்​கப்​பட்டு, ரோந்து பணி தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

சமீப​காலமாக மணிப்​பூரில் மீண்​டும் இரு குழு​வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. ஜிரிபாம் மாவட்​டத்​தில் பழங்குடியின இளம்​பெண் சமீபத்​தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வன்முறை​யாளர்​களால் எரித்​துக் கொலை செய்​யப்​பட்​டார். இந்தச் சம்பவம் அப்பகு​தி​யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்​தி​யது. ஜிரிபாம் பகுதி​யில் உள்ள வீடு​கள், கடைகளை தீ வைத்து எரித்து குகி இனத்தை சேர்ந்வர்கள் ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடுபட்டு வந்தனர்.

ஜிரிபாம் மாவட்​டத்​தில் சிஆர்​பிஎஃப் படையினரின் முகாம் மீது குகி ஆயுதக் குழு​வினர் தாக்​குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு படை வீரர்கள் பதில் தாக்​குதல் நடத்​தி​ய​தில் 10 பேர் உயிரிழந்​தனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, மைதேயி மக்கள் இருந்த முகாம்களில் இருந்து 6 பேர் மாயமாகினர். மணிப்​பூர் மாநில அரசில் கடைநிலை ஊழியராக பணியாற்றி வந்த லாயிஷ்ராம் ஹீரோஜித்​தின் மனைவி, அவரது 2 குழந்தை​கள், மாமி​யார், மனைவி​யின் சகோதரி உள்ளிட்ட 6 பேர்​ தான் மாயமாகி உள்ளனர் என தெரிய​வந்​தது.

இதுதொடர்பாக போலீ​ஸில் லாயிஷ்ராம் ஹீரோஜித் புகார் கொடுத்தார். அவர் கூறும்​போது, “எனது மனைவி, குழந்தை​கள், மாமியார் உள்ளிட்ட 6 பேரை ஆயுதம் தாங்கிய குகி தீவிர​வா​திகள் கடத்​திச் சென்றதை எனது நண்பரின் மனைவி பார்த்துள்ளார். என் குடும்பத்தினரை பத்திரமாக மீட்க வேண்​டும் என்று போலீ​ஸில் புகார் கொடுத்​துள்ளேன்” என்றார்.

இந்நிலை​யில், ஜிரிபாம் மாவட்​டத்​தில் உள்ள போரோபெக்​ரா​வில் இருந்து 16 கி.மீ. தொலை​வில் ஒரு பெண் மற்றும் 2 குழந்தை​களின் உடல்கள் நேற்று முன்​தினம் இரவு கண்டெடுக்​கப்​பட்டன. இந்த நிலை​யில், மேலும் 3 பேரின் உடல்கள் நேற்று பிற்​பகல் கண்டெடுக்​கப்​பட்டன. மாயமான 6 பேரின் உடல்​கள்​தான் இவை என்பதை போலீ​ஸார் உறுதி செய்​துள்ளனர். அழுகிய நிலை​யில் காணப்​பட்ட உடல்​கள், பிரேதப் பரிசோதனைக்காக எஸ்எம்​சிஎச் மருத்​துவ​மனைக்கு கொண்டு செல்​லப்​பட்​டதாக போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

இதற்​கிடையே, 6 பேரின் உடல்கள் கண்டெடுக்​கப்​பட்ட செய்தி பரவியதால், ஜிரிபாம் உள்ளிட்ட 5 மாவட்​டங்​களில் பதற்​றமான நிலை உருவானது. இதையடுத்து, அந்த மாவட்​டங்​களில் உள்ள பள்ளி​கள், கல்லூரி​களுக்கு நேற்று விடு​முறை அறிவிக்​கப்​பட்​டது. ஊரடங்கு உத்தர​வும் அமல்​படுத்​தப்​பட்டு, கூடுதல் போலீ​ஸார், துணை ராணுவ படையினர் குவிக்​கப்​பட்​டுள்​ளனர். சாலைகள், ​முக்கிய சந்​திப்புகளில் அவர்​கள் 24 மணி நேரமும் ரோந்து சுற்றி வரு​கின்​றனர். சம்​பவம் நடந்த பகுதி அசாம் ​மாநிலத்தை ஒட்டி அமைந்​துள்ள​தால், அசாம் ​போலீஸாரும் உஷார்​படுத்​தப்​பட்​டுள்​ளனர்.

முன்னதாக, மணிப்​பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதத்​தில் மைதேயி – குகி குழு​வினர் இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக மாறி, இரு தரப்​பிலும் நூற்றுக்​கணக்​கானோர் உயிரிழந்​தனர். வன்முறை காரணமாக சுமார் 60 ஆயிரம் பேர் வேறு இடங்​களுக்கு புலம்​பெயர்ந்​தனர். அவர்​களுக்கு தேவையான உதவிகளை மாநில அரசு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

சுமந்திரன் தேசியப்பட்டியல் ஆசனத்தைப் பெற வேண்டாம் : விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

Next Post

ஷுப்மன் கில்லுக்கு விரலில் காயம்: முதல் டெஸ்டில் பங்கேற்பது சந்தேகம் | Shubman Gill picks up thumb injury a week before Perth Test

Next Post
ஷுப்மன் கில்லுக்கு விரலில் காயம்: முதல் டெஸ்டில் பங்கேற்பது சந்தேகம் | Shubman Gill picks up thumb injury a week before Perth Test

ஷுப்மன் கில்லுக்கு விரலில் காயம்: முதல் டெஸ்டில் பங்கேற்பது சந்தேகம் | Shubman Gill picks up thumb injury a week before Perth Test

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin