• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கஞ்சிப்பானை இம்ரானின் சகா நீதிமன்றத்தில் முன்னிலை

GenevaTimes by GenevaTimes
November 20, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
கஞ்சிப்பானை இம்ரானின் சகா நீதிமன்றத்தில் முன்னிலை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



பிரபல பாதாள உலகத் தலைவன் கஞ்சிப்பானை இம்ரானின் முன்னாள் சகாவான தமிழ் இளைஞர் ஒருவர் பருத்தித்துறை நீதிமன்றத்தில் நேற்று முற்படுத்தப்பட்டதை அடுத்து நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் விசேட பாதுகாப்பு போட்டப்பட்டிருந்தது.


பருத்தித்துறை பொலிஸாரால் கடந்த மே மாதம் 30 ஆம் திகதி ஹெரோயின் போதைப் பொருளுடன் குறித்த வடமராட்சியை சேர்ந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு மே 31 ஆம் திகதி பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.


மேற்படி சந்தேக நபர், தான் பாதாள உலகக் குழுவின் தலைவன் கஞ்சிப்பானை இம்ரானின் முன்னாள் சகா எனவும், அவருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக பிரிந்து பூக்குடி கண்ணா என்பவருடன் இணைந்து செயற்பட்டு வந்ததாகவும், கஞ்சிப்பானை இம்ரானின் தந்தை மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பித்து யாழ்ப்பாணத்தில் தலைமறைவாகி இருந்ததாகவும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.


அத்துடன், மேற்குறித்த சம்பவங்களின் பின்னணியில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அவர் தெரிவித்ததை அடுத்து விசேட அதிரடிப்படையினர், பொலிசார் இணைந்து பலத்த பாதுகாப்புடன் பருத்தித்துறை நீதிமன்றத்திற்கு நேற்று பகல் 12 மணியளவில் அழைத்து வரப்பட்டிருந்தார்.


இதையடுத்து பருத்தித்துறை நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட அண்மித்த பகுதிகள் விசேட பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்படந்தன. நீதிமன்ற வளாகத்திற்குள் சென்றவர்கள் அத்தனைபேரும் உடல் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.


இவ்வாறு மேற்படி சந்தேக நபர் பருத்தித்துறை நீதிமன்ற நீதவான் கிருஷாந்தன் பொன்னுத்துரை முன்னிலையில் முற்படுத்தப்பட்ட போது வழக்கை விசாரித்த நீதவான் எதிர்வரும் டிசம்பர் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளை பிறப்பித்தார்.  (a)




Read More

Previous Post

ஃபிக்சட் டெபாசிட்ல இத்தனை டைப் இருக்கா? – யாருக்கு எது பெஸ்ட்?

Next Post

காற்று மாசு பிரச்சினையிலும் ‘அரசியல்’ – டெல்லி மக்களின் ‘டைம் லூப்’ வாழ்க்கை!  | Politics on air pollution issue Delhi peoples time loop life

Next Post
காற்று மாசு பிரச்சினையிலும் ‘அரசியல்’ – டெல்லி மக்களின் ‘டைம் லூப்’ வாழ்க்கை!  | Politics on air pollution issue Delhi peoples time loop life

காற்று மாசு பிரச்சினையிலும் ‘அரசியல்’ - டெல்லி மக்களின் ‘டைம் லூப்’ வாழ்க்கை!  | Politics on air pollution issue Delhi peoples time loop life

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin