• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தை தடுத்திருக்குமா ‘கவாச்’? இந்த தொழில்நுட்பம் பற்றி தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
June 17, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தை தடுத்திருக்குமா ‘கவாச்’? இந்த தொழில்நுட்பம் பற்றி தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் இன்று கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயிலுடன் சரக்கு ரயில் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் டார்ஜிலிங் கூடுதல் எஸ்.பி. அபிஷேக் ராய் தெரிவித்துள்ளார். சிக்னலில் நிற்காமல் சரக்கு ரயில் வந்ததால்தான் பயணிகள் ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இன்றைய விபத்தைத் தொடர்ந்து ‘கவாச்’ சிஸ்டம் குறித்து ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விளக்கிய பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதால், ரயில் நெட்வொர்க்கின் பெரும்பகுதியில் இந்த அமைப்பு இன்னும் நிறுவப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

விளம்பரம்

ரயில் விபத்துகள் அடிக்கடி நடந்து வரும் நிலையில், அதை தவிர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட ‘கவாச்’ தொழில்நுட்பம் எப்போது இயங்கத் தொடங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜீரோ ஆக்சிடெண்ட் என்பதை இலக்காக கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த தொழில்நுட்பம் எப்படி செயல்படும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

வெளியூர் பயணங்களுக்கு கார் முதல் விமானம் வரை எத்தனை வாகனங்கள் இருந்தாலும், ரயிலில் பயணம் செய்வதே தனி சுகம். ரயில்களில் செல்வது மட்டுமல்ல, பிரமாண்ட மலைப்பாம்பு போல வளைந்து செல்வதை பார்த்து ரசிப்பதுகூட ஒரு சுகம்தான். இந்தியாவிலேயே முதன்முதலில் ரயிலை பார்த்து ரசித்தவர்கள் சென்னை மக்கள்தான். சென்னை மாகாணத்தில் சாலைகள் மற்றும் கட்டடங்களை கட்டுவதற்கு தேவையான பொருட்களை சுமந்து கொண்டு 1832 முதல் ஓடத் தொடங்கியது நீராவி இஞ்ஜின் ரயில். அதைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரயில்கள் ஓடத் தொடங்கினாலும், பயணிகள் ரயில் இயக்கப்பட்டது 1853ஆம் ஆண்டுதான்.

விளம்பரம்

மும்பையில் முதன்முதலாக 14 பெட்டிகளுடன் இயக்கப்பட்ட ரயிலில் மொத்தம் பயணம் செய்தவர்கள் 400 பேர். ஆங்கிலேயர் ஆட்சியில் அப்போது மீட்டர் கேஜ் பாதையில் தொடங்கிய ரயில் பயணம், இன்று புல்லட் ரயிலாக சீறிப் பாயவிருக்கிறது. நீராவியில் இருந்து நிலக்கரிக்கு மாறிய தொழில்நுட்பம், பின் டீசலை கடந்து தற்போது மின்சாரத்தில் பாய்ந்து கொண்டிருக்கின்றன ரயில்கள். இந்தியாவில் நாள்தோறும் 3 கோடி பேரை சுமந்து கொண்டு, 60 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை வலம் வருகின்றன 11 ஆயிரம் ரயில்கள். கன்னியாகுமரி முதல் திப்ரூகர் வரை சுமார் 4 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் விவேக் எக்ஸ்பிரஸ்தான் அதிக தூரம் செல்லும் ரயில். பல லட்சம் மக்களையும், பல்லாயிரம் கோடி மதிப்பு பொருட்களையும் சுமந்து செல்லும் ரயில்கள் விபத்தில் சிக்குவது மிகவும் அபூர்வம்.

விளம்பரம்

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ரயில்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் செய்தியை பார்த்து வருகிறோம். இது போன்ற விபத்துகள் நடக்காமல் இருப்பதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது கவாச் தொழில்நுட்பம். ஜீரோ ஆக்சிடெண்ட் என்ற நோக்கத்தை மையமாக 2012 முதல் பல ஆண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டதுதான் இந்த கவாச் தொழில்நுட்பம். பாதுகாப்பு கவசம் என்பதன் சுருக்கமே இந்த கவாச். ரயில் எஞ்ஜின், சிக்னல் அமைப்பு, ரயில் நிலையம் ஆகியவற்றில் நிறுவப்படும் கவாச் தொழில்நுட்பம், ஜிபிஎஸ் மற்றும் ரேடியோ அலைவரிசை மூலம் இயங்கக்கூடியது.

விளம்பரம்

Also Read |
95 வருடங்களாக இந்த நாட்டில் ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை… காரணம் என்ன தெரியுமா?

ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் வரும்போது, ஓட்டுநர்களுக்கு ஆடியோ, வீடியோ மூலம் முதலில் எச்சரிக்கை விடுக்கிறது கவாச். ஓட்டுநர்களிடம் இருந்து அப்போதும் பதில் வராவிட்டால் தானாக வேகத்தை குறைத்து குறிப்பிட்ட தூரத்தில் ரயில்களை நிறுத்திவிடுவதுதான் இதன் சிறப்பம்சம். ஆபத்தில் இருக்கும்போது அனுப்பப்படும் சிக்னலுக்கு ரயில் ஓட்டுநர் செயல்பட தவறினாலும், சிவப்பு சிக்னலை தாண்டியவுடன் தானாகவே பிரேக் போடும். லோகோ பைலட் தூங்கினாலும், விழிப்போடு செயலாற்றி விபத்தை தவிர்ப்பதே இதன் நோக்கம். ஆந்திராவின் செகந்திராபாத் நகரில் முதன்முதலில் நடத்தப்பட்ட சோதனையில் நம்பிக்கை தந்திருக்கிறது இந்த தொழில்நுட்பம்.

விளம்பரம்

சோதனை முறையில் கடந்த 2022ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கவாச் தொழில்நுட்பம் இந்தாண்டுக்குள் நாடு முழுவதும் கொண்டு வரப்படும் என ரயில்வே தரப்பில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

.

Read More

Previous Post

இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: ஜூன் 18, 2024

Next Post

டெல்லி விமான நிலையத்தில் திடீர் மின்தடை; செயல்பாடுகள் பாதிப்பு | Makkal Osai

Next Post
டெல்லி விமான நிலையத்தில் திடீர் மின்தடை; செயல்பாடுகள் பாதிப்பு | Makkal Osai

டெல்லி விமான நிலையத்தில் திடீர் மின்தடை; செயல்பாடுகள் பாதிப்பு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin