Last Updated:
குறிப்பாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத் மற்றும் ஈராக் போன்ற வளைகுடா நாடுகளின் எண்ணெய் ஏற்றுமதிக்கு இதுவே பிரதான வழியாகும்.
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் போக்கு தீவிரம் அடைந்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஈரான் முக்கிய நடவடிக்கை எடுக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஈரான் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே நிலவும் முற்றிய அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், உலக நாடுகளின் எரிசக்தி பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவது குறித்த தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாரசீக வளைகுடாவிற்கும் ஓமன் வளைகுடாவிற்கும் இடையில் அமைந்துள்ள இந்த குறுகிய கடல் பகுதி, உலகின் ‘எரிசக்தி நரம்பு மண்டலம்’ என்று அழைக்கப்படுகிறது. ஈரான் மீது விதிக்கப்படும் சர்வதேச பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடியாக, “ஒரு சொட்டு எண்ணெய் கூட இந்த வழியாக வெளியேற விடமாட்டோம்” என்று ஈரான் விடுத்துள்ள மிரட்டல், உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்ட ஒரு மிகப்பெரிய ‘பொருளாதார செக்’ என்று பார்க்கப்படுகிறது.
ஈரானின் இந்த ஒரு முடிவு ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தையும் முடக்கும் வல்லமை கொண்டது என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
உலக அளவில் கடல் வழியாகக் கொண்டு செல்லப்படும் கச்சா எண்ணெய்ப் போக்குவரத்தில் சுமார் 20% முதல் 30% வரை இந்தப் பாதை வழியாகவே நடைபெறுகிறது.
குறிப்பாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத் மற்றும் ஈராக் போன்ற வளைகுடா நாடுகளின் எண்ணெய் ஏற்றுமதிக்கு இதுவே பிரதான வழியாகும். ஒருவேளை ஈரான் இந்தப் பாதையைத் தனது ராணுவ பலத்தைப் பயன்படுத்தி மூடினால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்படும்.
இதனால் இந்தியாவுக்கு என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் அல்லது ஏற்படாது என்பது குறித்து அடுத்தடுத்த நாட்களில் தெரியவரும்
கச்சா எண்ணெய் விநியோகத்தில் அதிரடி முடிவு எடுக்கும் ஈரான்.. உலக நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம்…


