Last Updated:
கச்சத்தீவின் மீதான இறையாண்மை இலங்கை அரசிடமே உள்ளது என்கிற நிலைப்பாட்டை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளதாக இலங்கை அதிபர் அநுரகுமார கூறியுள்ளார்.
கச்சத்தீவு இலங்கைக்கே சொந்தமானது என இந்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளதாகவும், இதனை வரவேற்பதாகவும் இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக்க கூறியுள்ளார்.
இலங்கையின் குருநாகல் – நிகவெரட்டிய பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய அவர், கச்சத்தீவை இலங்கைக்கு மாற்றியளித்த ஒப்பந்தங்களை மீண்டும் ஆய்வு செய்யவோ ரத்து செய்யவோ இந்திய அரசு விரும்பவில்லை என இந்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி உச்ச நீதிமன்ற விசாரணையில் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார். கச்சத்தீவின் மீதான இறையாண்மை இலங்கை அரசிடமே உள்ளது என்கிற நிலைப்பாட்டை இந்தியா இதன் மூலம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அநுரகுமார சுட்டிக்காட்டினார்.

