குல்விந்தர் கவுர் எனப்படும் சிஐஎஸ்எஃப் பெண் காவலர், கங்கனா ரனாவத்தின் விவசாயிகளுக்கு எதிரான கருத்தால் அதிருப்தி அடைந்ததில் இவ்வாறு தாக்கியதாக தெரிய வந்துள்ளது.
இன்று மாலை சண்டிகர் விமான நிலையத்துக்கு வந்த கங்கனா ரனாவத்துக்கும், குல்விந்தர் கவுருக்கும் இடையே திடீர் வாக்குவாதம் எழுந்தது. வாக்குவாதத்தின் ஊடாக பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் தொடர்பான கங்கனாவின் கருத்துக்கு குல்விந்தர் ஆட்சேபம் தெரிவித்ததில் அங்கே புதிய மோதல் வெடித்தது.

