Last Updated:
ககன்யான் திட்டத்தில் பூமிக்கு திரும்பும் விண்கலனுக்கான ட்ரோக் பாராசூட்கள் சண்டிகர் டெர்மினல் பாலிஸ்டிக்ஸ் ஆய்வகத்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
ககன்யான் திட்டத்தில் பூமிக்கு திரும்பி வரும் கலனின் வேகத்தை குறைக்கக்கூடிய ட்ரோக் பாராசூட்கள் சோதனைகள் வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இஸ்ரோவின் லட்சிய திட்டமான மனிதனை விண்ணுக்கு அனுப்பி மீண்டும் திரும்பி அழைத்து வரும் ககன்யான் திட்டத்திற்காக பல்வேறு சோதனைகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், விண்வெளியில் இருந்து மீண்டும் பூமிக்குள் நுழையும்போது, மணிக்கு பல ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் வரும் விண்கலனை பத்திரமாக இறக்குவதில் பாராசூட் அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.
ISRO successfully completed Drogue Parachute Deployment Qualification Tests for the Gaganyaan Crew Module at the RTRS facility of TBRL, Chandigarh, during 18–19 December 2025.
The tests confirmed the performance and reliability of the drogue parachutes under varying flight…
— ISRO (@isro) December 20, 2025
அந்த வகையில் ககன்யான் விண்கலனின் வேகக்குறைப்பு அமைப்பு, 4 வகைகளான 10 பாராசூட்டுகளை கொண்டுள்ளது.
பூமிக்குள் விண்கலன் வந்ததும் 2 பாராசூட்டுகள் விரிக்கப்படும், அதை தொடர்ந்து 2 ட்ராக் பாராசூட்டுகள் விரிக்கப்பட்டு கலனின் வேகம் படிப்படியாக குறைக்கப்படும். பின்னர், 3 பைலட் பாராசூட்டுகளும் அதன் பின்னர் மூன்று பிரதான பாராசூட்டுகளும் அடுத்தடுத்து திறக்கப்படும்.
இதில், கலனின் வேகத்தை குறைக்க உதவும் ட்ராக் பாராசூட்டுகள், சண்டிகரில் உள்ள டெர்மினல் பாலிஸ்டிக்ஸ் ஆராய்ச்சி ஆய்வகத்தில் கடந்த 18 மற்றும் 19 தேதிகளில் பரிசோதிக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மாறுபட்ட வானிலை சூழலுக்கு ஏற்ப ட்ரோக் பாராசூட்கள் பரிசோதிக்கப்பட்டதாகவும் அந்த தகுதி பரிசோதனைகள் வெற்றி பெற்றதாகவும் இஸ்ரோ கூறியுள்ளது.


