பிருத்விராஜ் நடிப்பில் உருவான ‘ஐ நோபடி’ திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வருகிற 25 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், மலையாள சினிமாவில் பிரபல நடிகரான பிருத்விராஜ் மலையாளத்தில் கடந்த சில ஆண்டுகளாக நல்ல படங்களைக் கொடுத்ததுடன் லூசிபர், ப்ரோ டாடி, எம்புரான் ஆகிய திரைப்படங்களை இயக்கி இயக்குநராக அங்கீகாரம் பெற்றார். ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகும் ‘வாரணாசி’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் பிரித்விராஜ். மேலும் இவர் ‘சலார் 2’ படத்தில் நடித்து வருகிறார்.
‘ஐ நோபடி’ படத்தை ‘ரோஷாக்’ பட புகழ் இயக்குனர் நிசாம் பஷீர் இயக்கியிருந்தார். சமீர் அப்துல் திரைக்கதை எழுதியுள்ளார். இப்படத்தில் பிரித்விராஜுடன் இணைந்து பார்வதி திருவோத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே இவர்களது கூட்டணி என்னு நிண்டே மொய்தீன் , மை ஸ்டோரி ஆகிய படங்களில் இணைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் ‘ஐ நோபடி’ படத்தில் இணைந்திருக்கிறது.
ஈ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து பிரித்விராஜ் இந்த படத்தினை தயாரித்துள்ளார். ‘அனிமல்’ திரைப்படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
அதிரடியான சண்டைக்காட்சிகளுடன் இப்படம் உருவாகியிருந்தாலும் கதை பலவீனத்தால் பெரிய வெற்றியை பெறவில்லை. கடந்த ஜூலை 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரூ. 15 கோடியை மட்டுமே வசூலித்தது.
இந்நிலையில், ‘ஐ நோபடி’ படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வருகிற 25 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வைசாக் இயக்கத்தில் பிருத்விராஜ் நடித்துள்ள ‘கலிபா’ திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 20ம் தேதி வெளியாகவுள்ளது.
The post ஓ.டி.டி.யில் வெளியாகும் பிருத்விராஜின் “ஐ நோபடி” திரைப்படம்… எதில், எப்போது பார்க்கலாம்?… appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

