Youtube-ல் கடந்த ஓராண்டுக்குள் 23 லட்சம் சந்தாதாரர்களை பெற்று நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி சாதனை படைத்துள்ளது.
நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி தொடங்கப்பட்டு 8 ஆண்டுகள் ஆகும் நிலையில், இளம் தலைமுறை அதிகம் நாடும் இணையத்திலும் தடம் பதித்து, புதிய சாதனைகளுடன் வெற்றி பயணத்தைத் தொடர்கிறது. இன் டெப்த் அனலைசஸ், ஓபன் டாக், நியூஸ் 18 ஸ்பெஷல்ஸ், டி கோட், அன் பாக்ஸ், மோட்டார் 18, தேர்தல் தொடர்பான களம்- 18, கேன்டிட் வித் கேண்டிடேட்ஸ் என அன்றாட தேவைகள் முதல் அரசியல் வரை எண்ணற்ற காணொளிகள் யூ-டியூப்பில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
சொல் அதிகாரம், சிறப்பு நேர்காணல்கள், மக்கள் சபை, வெல்லும் சொல், வணக்கம் தமிழ்நாடு, கதையல்ல வரலாறு, க்ரைம் டைம் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் யூடியூப் தளத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இதன் பலனாக, கடந்த ஓராண்டில், யூ-டியூப் தளத்தில் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.
கடந்தாண்டு மே மாதம் 9 ஆம் தேதி, நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் யூ-டியூப் சேனலுக்கு இருபது லட்சத்து 70 ஆயிரம் சந்தாதாரர்கள் இருந்தனர். இந்நிலையில், குறுகிய காலமாக ஓராண்டிற்குள் கூடுதலாக 23 லட்சம் பேரின் நம்பிக்கை மற்றும் நன்மதிப்பை பெற்ற நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் யூடியூப் பக்கம் 50 லட்சம் சந்தாதாரர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
நேயர்களின் ஒத்துழைப்பின்றி இந்த சாதனை சாத்தியமில்லை என்பதால் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பொதுமக்களுக்கு நியூஸ் 18 தமிழ்நாடு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
