• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஓய்வை அறிவித்த இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனிலுக்கு விராட் கோலி சொன்ன மேசேஜ்!

GenevaTimes by GenevaTimes
May 31, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஓய்வை அறிவித்த இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனிலுக்கு விராட் கோலி சொன்ன மேசேஜ்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்த இந்திய ஆண்கள் கால்பந்து அணியின் கேப்டன் குறித்து, சமூகவலைதளப் பக்கத்தில் விராட் கோலி பதிவிட்ட செய்தி, ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.

கடந்த 2002ஆம் ஆண்டு மோகன் பாகன் அணிக்காக கால்பந்து வாழ்க்கையைத் தொடங்கிய சுனில் சேத்ரி, தனது அசாத்திய திறமையால் கடந்த 2005ஆம் ஆண்டு இந்திய அணியில் இடம்பிடித்தார். இந்திய அணிக்காக அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை படைத்த அவர், சர்வதேச கால்பந்து போட்டிகளை பொறுத்தவரை, கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்சிக்கு அடுத்து அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையையும் கைவசம் வைத்துள்ள சுனில் சேத்ரி, தற்போது இந்திய கால்பந்து அணியின் கேப்டனாகவும் இருக்கிறார்.

விளம்பரம்

வரும் ஜூன் 6ஆம் தேதி இந்திய கால்பந்து அணி, குவைத்துக்கு எதிராக ஃபிபா உலகக் கோப்பை 2026 தகுதிச் சுற்றுப் போட்டியில் விளையாட உள்ளது. அந்த போட்டியுடன் தான் ஓய்வுபெறப் போவதாக 39 வயதாகும் சுனில் சேத்ரி அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க:
யாருடைய ஆசை நிறைவேறும்..? வாழ்வா சாவா போட்டியில் மோதும் சிஎஸ்கே – ஆர்சிபி அணிகள்

இது தொடர்பாக, தனது எக்ஸ் பக்கத்தில் சுமார் 9 நிமிட வீடியோவை வெளியிட்டுள்ள அவர், புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்கான நேரம் என்றும், தனது ஓய்வு குறித்து, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு தெரிவித்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

விளம்பரம்

இதையடுத்து, அவரது நெருங்கிய நண்பரான விராட்கோலி பதிவிட்டுள்ள கமெண்ட் வைரலாகியுள்ளது. “சகோதரா உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன்” என விராட்கோலி பதிவிட்டுள்ளார். விராட் கோலியும், சுனில் சேத்ரியும் நீண்டகால நண்பர்கள். இருவரும் பல்வேறு முறை இணைந்து பேட்டி அளித்திருக்கின்றனர்.

I’d like to say something… pic.twitter.com/xwXbDi95WV

— Sunil Chhetri (@chetrisunil11) May 16, 2024

விளம்பரம்

இந்நிலையில், ஓய்வு குறித்து சுனில் சேத்ரி தனக்கும் செய்தி அனுப்பியதாக குறிப்பிட்டுள்ள கோலி, அவர் மனநிறைவுடன் இருப்பார் என்று தான் உணர்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பல ஆண்டுகளாக இருவரும் நெருக்கமாக இருப்பதாகவும், அவர் சிறந்ததை தவிர, வேறு ஒன்றையும் கூறப்போவதில்லை என்றும் கோலி தெரிவித்துள்ளார். விராட்கோலியின் இந்த பதிவு ரசிகர்களால் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

.



Read More

Previous Post

குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல் – News18 தமிழ்

Next Post

சிறிய வீடு.. மொபைல் போன் கூட இல்லை.. எளிமையாக வாழும் ரத்தன் டாடாவின் தம்பி ஜிம்மி டாடா!

Next Post
சிறிய வீடு.. மொபைல் போன் கூட இல்லை.. எளிமையாக வாழும் ரத்தன் டாடாவின் தம்பி ஜிம்மி டாடா!

சிறிய வீடு.. மொபைல் போன் கூட இல்லை.. எளிமையாக வாழும் ரத்தன் டாடாவின் தம்பி ஜிம்மி டாடா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin