சிங்கப்பூரில் தோ பாயோ பிளாட்டின் கீழ்தளத்தில் ஓய்வெடுத்த வெளிநாட்டு ஊழியர்களை வீடியோ எடுத்து விமர்சித்த ஆடவருக்கு எதிராக இணையவாசிகள் மற்றும் சிங்கப்பூரர்கள் பலர் களமிறங்கினர்.
அந்த காணொளியில், பிளாட்டின் கீழ்தளத்தில் குறைந்தது மூன்று வெளிநாட்டு ஊழியர்கள் தரையில் விரிப்பை விரித்து அமர்ந்திருப்பதையோ அல்லது படுத்திருப்பதையோ காணமுடிந்தது.
VIDEO: https://www.facebook.com/reel/1330416445339916
அந்த காணொளியில் அவர் ஊழியர்களிடம் சென்று, “உள்ளே புகைபிடிக்க அனுமதி இல்லை” என்றும் “உங்களை இங்கு தூங்க அனுமதித்தது யார்..?” என்றும் திரும்பத் திரும்பக் கேள்வி எழுப்பினார்.
மேலும் “இது உங்கள் தாத்தாவின் இடம் இல்லை, சரியா” என்றும் அவர் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி ஊழியர்களை காயப்படுத்தினார்.
தொடர்ந்து அவர் பேசிக்கொண்டே இருந்த நிலையில், கீழே அமர்ந்திருக்கும் ஊழியர்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தனர்.
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியை நடத்தும் சிங்கப்பூரருக்கு S$7,000 அபராதம்
இந்த காணொளி மதிய வேளையில் 1:12 மணிக்கு எடுக்கப்பட்டது என்று ஷின் மின் டெய்லி நியூஸ் கூறியுள்ளது.
அவரின் வார்த்தைகளை கேட்டு பீதியடைந்த வெளிநாட்டு ஊழியர் ஒருவர் உடனே எழுந்து அமர்வதையும் காணொளியை காண முடிகிறது.
மேலும் பீதியில் இருந்த வெளிநாட்டு ஊழியர்கள் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருப்பதையும் அதில் காண முடிந்தது.
இணையத்தில் தீயாக பரவிய இந்த காணொளி பல்வேறு கருத்துக்களை பெற்றது. வலைதள வாசிகள் பலர் வெளிநாட்டு ஊழியர்களுக்கு தங்கள் அனுதாபத்தை வெளிப்படுத்தினர்.
வீடியோ எடுத்த அந்த இரக்கமற்ற ஆடவரின் மோசமான செயலையும் பல வலைதள வாசிகள் கண்டித்தனர்.
வெளிநாட்டு ஊழியர்கள் அங்கு எந்த தவறும் செய்யாத நிலையில், ஏன் அங்கு ஓய்வெடுக்க கூடாது என்று வலைதள வாசிகள் கேள்வி எழுப்பினர்.
அதில் ஒருவர்: “அவர்களை அங்கிருந்து போக சொல்ல உங்களுக்கு அனுமதி தந்தது யார்? உங்களால் உண்மையில் அதை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால், அவர்கள் ஓய்வெடுக்க அறைக்கு பணம் செலுத்துங்களேன் ?” என்றார்.
கழிவறையில் ஆடவரிடம் தகாத முறையில் நடந்துகொண்ட இந்தியருக்கு சிறை, பிரம்படி
இந்த காணொளி அக்டோபர் 26 அன்று புளாக் 46 – தோ பயோ லோரோங் 5 இல் எடுக்கப்பட்டது என்று ஷின் மின் தெரிவித்துள்ளது.
அன்று பிற்பகல் 3 மணியளவில் ஷின் மின் நிருபர்கள் அந்த புளாக்குக்கு சென்று பார்த்தபோது, வெளிநாட்டு ஊழியர்கள் யாரும் அங்கு காணவில்லை.
அந்த புளாக்கின் தரைத்தளம் குப்பைகள் எதுவும் இல்லாமலும் சுத்தமாகவும் இருப்பதை நிருபர்கள் பார்த்தனர்.
அதன் நான்காவது மாடியில் வசிக்கும் ஒருவர் அவர்களிடம் கூறியதாவது; சமீபத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் கீழ்த் தளத்தில் ஓய்வெடுப்பதைக் கண்டதாகச் சொன்னார்.
அவர்கள் காலையிலும் மதிய உணவு இடைவேளையிலும் மட்டுமே அங்கு இருந்ததாக அவர் கூறினார்.
மேலும், “இது அவர்களுக்கு வசதியாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன், அவ்வாறு இருப்பதில் என்ன தவறு?” என்றும் அவர் ஊழியர்களுக்கு ஆதரவாக பேசினார்.
இந்த சம்பவத்தின் எதிரலையாக, பொதுமக்கள் வெளிநாட்டு ஊழியர்களிடம் அன்பும் அனுதாபமும் காட்டுமாறு வெளிநாட்டு ஊழியர் உதவி அமைப்புகள் கேட்டுக்கொண்டன.
ஏனென்றால், கொளுத்தும் வெயிலில் அவர்கள் நீண்ட நேரம் வேலை செய்கிறார்கள், அவ்வப்போது அவர்களுக்கு ஓய்வு கட்டாயம் வேண்டும்.
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் சோதனை… 4 ஊழியர்கள் கைது
அந்த நபர் இப்படி “முரட்டுத்தனமாக நடந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. அதே ஊழியர்கள் தான் அந்த கீழ்த் தளங்களைக் கட்டியவர்கள். வேறு எங்கு அவர்கள் ஓய்வெடுக்கச் செல்ல வேண்டும்?” என்று ‘ItsRainingRaincoats’ நிறுவனர் திருமதி. தீபா கேட்டார்.
வெளிநாட்டு ஊழியர்கள் பெரும்பாலும் நீண்ட நேர வேலையை சகித்துக்கொண்டு பார்ப்பவர்கள், இதன் காரணமாக அவர்கள் சற்று ஓய்வு முக்கியம் என்பதை திருமதி சுவாமிநாதன் சுட்டிக்காட்டினார்.
“ஆனால் அவர்கள் ஓய்வெடுக்கும் அந்த நேரத்தில் கூட, எப்படி புண்படுத்தப்படுகிறார்கள்,” என்று அவர் கவலையுடன் கூறினார்.
இதனால் வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஓய்வு இடங்களை உருவாக்குவதற்கான அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

