உதாரணமாக ரூ.30 லட்சம் முதலீடு செய்தால், ஆண்டுக்கு ரூ.2.46 லட்சம் வட்டி கிடைக்கும். இந்த தொகையை 12 மாதங்களுக்கு பிரித்தால், தோராயமாக ரூ.20,500 என்ற நிலையான மாதாந்திர வருமானம் தருவதாக இருக்கும். இது அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஓய்வூதிய திட்டமாக திறம்பட செயல்படுகிறது. முன்னதாக இந்த திட்டத்தில் ஒரு முதலீட்டாளர் அதிகபட்சமாக ரூ.15 லட்சமே டெபாசிட் செய்ய முடியும் என்று இருந்த நிலையில், தற்போது அதிகபட்சமாக ரூ.30 லட்சம் டெபாசிட் செய்ய இந்த திட்டம் அனுமதிக்கிறது. இதனால் மூத்த குடிமக்கள் தங்கள் வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வழி செய்யப்பட்டுள்ளது.