• Login
Tuesday, August 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஓய்வு பெற்ற அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் தனுஷ் கோட்டியன் சேர்ப்பு | tanush kotian to join team india squad for bgt versus australia

GenevaTimes by GenevaTimes
December 24, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஓய்வு பெற்ற அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் தனுஷ் கோட்டியன் சேர்ப்பு | tanush kotian to join team india squad for bgt versus australia
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மெல்பர்ன்: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 296 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து அடிலெய்டில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இதன் பின்னர் பிரிஸ்பனில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.

பிரிஸ்பன் போட்டியின் முடிவில் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு முடிவை அறிவித்தார். இந்நிலையில் அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் 26 வயதான சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான தனுஷ் கோட்டியன் சேர்க்கப்பட்டுள்ளார். மும்பையை சேர்ந்த தனுஷ் கோட்டியன் தற்போது அகமதாபாத்தில் நடைபெற்று வரும் விஜய் ஹசாரே தொடரில் விளையாடி வருகிறார்.

இன்று (24-ம் தேதி) ஆஸ்திரேலியா புறப்பட்டுச் செல்லும் தனுஷ் கோட்டியன், மெல்பர்ன் நகரில் வரும் 26-ம் தேதி தொடங்கும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியினருடன் இணைவார். சமீபத்தில் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிராக மெல்பர்ன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் தனுஷ் கோட்டியன் பேட்டிங் வரிசையில் 8-வது இடத்தில் களமிறங்கி 44 ரன்கள் சேர்த்திருந்தார். முதல்தர கிரிக்கெட்டில் 33 ஆட்டங்களில் விளையாடிய உள்ள அவர், 101 விக்கெட்களையும், 2 சதங்களுடன் 1,525 ரன்களையும் சேர்த்துள்ளார்.

அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் இடது கை சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான அக்சர் படேல்தான் சேர்க்கப்படுவதாக இருந்துள்ளது. ஆனால் அவர், விஜய் ஹசாரே தொடரில் முதல் 2 ஆட்டங்களில் பங்கேற்ற நிலையில் சொந்த காரணங்களுக்காக ஓய்வு கோரியிருந்தார். இதன் காரணமாக தனுஷ் கோட்டியன் தேர்வாகி உள்ளார்.

இது ஒருபுறம் இருக்க ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் கடைசி நேரத்தில் ஏதேனும் காயம் அடைந்துவிட்டால் அவர்களுக்கு மாற்று வீரர் தேவை என்பதால் தனுஷ் கோட்டியன் தேர்வு செய்யப்பட்டு ஆஸ்திரேலியா அனுப்பி வைக்கப்படுதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.



Read More

Previous Post

தற்கொலையை தடுத்து, போலீஸ் பாதுகாப்பு வழங்கியதற்கு ரூ.9.91 லட்சம் செலுத்த விவசாயிக்கு நோட்டீஸ் | Rajasthan farmer threatening suicide asked by police to pay for security

Next Post

‘ஹனியே, நஸ்ரல்லாவை கொன்றோம்; ஹமாஸ், ஹிஸ்புல்லாவை வீழ்த்திவிட்டோம்’ – இஸ்ரேல் | Israel Defence Minister claims responsibility of killing Haniyeh, Nasrallah

Next Post
‘ஹனியே, நஸ்ரல்லாவை கொன்றோம்; ஹமாஸ், ஹிஸ்புல்லாவை வீழ்த்திவிட்டோம்’ – இஸ்ரேல் | Israel Defence Minister claims responsibility of killing Haniyeh, Nasrallah

‘ஹனியே, நஸ்ரல்லாவை கொன்றோம்; ஹமாஸ், ஹிஸ்புல்லாவை வீழ்த்திவிட்டோம்’ - இஸ்ரேல் | Israel Defence Minister claims responsibility of killing Haniyeh, Nasrallah

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin