• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஓமான் மீது குண்டு மழை விழும்.. டிரம்ப் மிரட்டலால் வளைகுடா நாடுகள் ஷாக்.. கம்முனு இருக்கணும்! | Trump Threatens Airstrikes on Oman Over Strait of Hormuz Blockade Interference in Fox News Interview

GenevaTimes by GenevaTimes
August 17, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஓமான் மீது குண்டு மழை விழும்.. டிரம்ப் மிரட்டலால் வளைகுடா நாடுகள் ஷாக்.. கம்முனு இருக்கணும்! | Trump Threatens Airstrikes on Oman Over Strait of Hormuz Blockade Interference in Fox News Interview
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஓமான் மீது குண்டு மழை விழும்.. டிரம்ப் மிரட்டலால் வளைகுடா நாடுகள் ஷாக்.. கம்முனு இருக்கணும்!

ஈரான் விஷயத்தில் தற்போது முக்கிய பேச்சுவார்த்தை கருவியாக இருக்கும் ஓமான் நாட்டிற்கு மிரட்டல் விடுத்துளார் டிரம்ப், ஏற்கனவே ஒட்டுமொத்த முதலீட்டு சந்தையும் ஈரான் – அமெரிக்கா மத்தியில் ஜூன் மாதம் செய்யப்பட்ட அமைதி ஒப்பந்தம் தொடர்பான 60 நாட்கள் இன்றுடன் முடிகிறது. இதனால் மீண்டும் போர் துவங்குமா என்ற அச்சத்தில் இருக்கும் வேளையில் டிரம்ப் மீண்டும் தனது மிரட்டலை துவங்கியுள்ளார்.

ஹார்முஸ் வழித்தடத்தில் அமெரிக்காவின் கடற்படை முடக்கத்தில் தலையிட்டால் ஓமான் மீது குண்டு மழை பொழியும் என மிரட்டியுள்ளார் டிரம்ப்.

ஓமான் மீது குண்டு மழை விழும்.. டிரம்ப் மிரட்டலால் வளைகுடா நாடுகள் ஷாக்.. கம்முனு இருக்கணும்!

அமெரிக்கா – ஈரான் விவகாரத்தில் மத்தியஸ்த நாடுகளாக இருந்து பாகிஸ்தான், கத்தார் நாடுகளை விடுத்து ஈரான் தற்போது ஓமான் உடன் பேச்சுவாத்தை நடத்தி வருகிறது. அமெரிக்காவுடன் நீண்ட கால நட்புறவில் ஓமான் இருந்தாலும் ஈரான் போர் விவகாரத்தில் தொடர்ந்து நடுநிலை நாட்டும் காரணத்தால் ஓமான் உடன் கடந்த 3 வாரகங்களாக ஈரான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் இன்று டிரம்ப் ஃபாக்ஸ் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் டிரம்ப், ஈரானுக்கு நெருக்கடி கொடுத்து அதன் மூலம் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்ய அமெரிக்க திட்டமிட்டு வருகிறோம். இத்தகைய சூழ்நிலையில் அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விஷயத்தில் ஓமான் தலையிட்டால் அந்நாட்டின் மீது சரமாரியாக குண்டு மழை தாக்குதல் நடத்தப்பட்டு அவர்களை கதறவிடுவோம் என பேசியுள்ளார்.

மேலும் ஈரான் உடன் போரை முடிக்க தங்களுக்கு எவ்விதமான அவசரமும் இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் டிரம்ப். அமெரிக்கா – ஈரான் மத்தியிலான போர் கடந்த 6 மாதங்களாக நடந்து வரும் வேளையில் இன்னும் எவ்விதமான தீர்வும் எட்டப்படாத நிலையில் உள்ளது.

மேலும் டிரம்ப்-ன் தொடர்ந்து மாறுப்பட்ட கருத்தை கொண்டு இருக்கும் காரணத்தால் ஈரான் நேரடியாக அமெரிக்கா உடன் பேச விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளது. இப்படியிருக்கையில் ஈரான் உடனான பேச்சுவார்த்தைக்கு ஒரே நுழைவு வாயிலாக இருக்கும் ஓமான்-ஐ டிரம்ப் மிரட்டுவது என்பது வளைகுடா பகுதியில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

இதே ஃபாக்ஸ் சேனல் உடனான பேட்டியில் டிரம்ப் பேசுகையில், இரு நாடுகள் மத்தியிலான அமைதி ஒப்பந்தத்தின் 60 நாட்கள் இன்றுடன் முடியும் வேளையில் ஈரான் வெள்ளிக் கொடி காட்டி சரண்டர் ஆக வேண்டும். மேலும் அமெரிக்காவின் மிட்டேர்ம் தேர்தலில் ஈரான் போர் முக்கிய விஷயமாக இருக்காது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதேபோல் ஈரான் எந்த வகையில் அணுஆயுதத்தை வைத்திருக்க கூடாது எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதேவேளையில் ஈரான் நாட்டின் வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்திதொடர்பாளரான இஸ்மாயில் கூறுகையில், தற்போது அமெரிக்கா தாக்கினால் அதை எதிர்த்து தாக்குவதற்கு ஈரான் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

Share This Article

English summary

Trump Threatens Airstrikes on Oman Over Strait of Hormuz Blockade Interference in Fox News Interview

Trump Threatens Airstrikes on Oman Over Strait of Hormuz Blockade Interference in Fox News Interview — கம்முனு இருக்கணும்.. ஓமான் மீது குண்டு மழை விழும்.. டிரம்ப் மிரட்டலால் வளைகுடா நாடுகள் ஷாக்!

Story first published: Monday, August 17, 2026, 19:14 [IST]

Other articles published on Aug 17, 2026

Read More

Previous Post

பாஜகவில் தேசிய அளவிலான நிர்வாகிகள் மாற்றம்.. வானதி சீனிவாசன் விடுவிப்பு.. புதிய மகளிர் அணி தலைவர் யார்? | India News (இந்தியா செய்திகள்)

Next Post

மீண்டும் பிகேஆர் கட்சியில் இணைவதாக முன்னாள் அமைச்சர் சேவியர் ஜெயகுமார் அறிவிப்பு

Next Post

மீண்டும் பிகேஆர் கட்சியில் இணைவதாக முன்னாள் அமைச்சர் சேவியர் ஜெயகுமார் அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin