• Login
Sunday, June 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஓமன் கடலில் உயிரிழந்த நிஷாந்தின் உடல் மீட்பு பணி தீவிரம் : இந்திய தூதரகம் விளக்கம் | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 14, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
ஓமன் கடலில் உயிரிழந்த நிஷாந்தின் உடல் மீட்பு பணி தீவிரம் : இந்திய தூதரகம் விளக்கம் | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 14, 2026 3:01 PM IST

ஓமனில் இருந்து தனது கணவர் உடலை உடனடியாக மீட்டு வர வேண்டும் என நிஷாந்த்தின் மனைவி சராபின் தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு அளித்தார். 

மாலுமி நிஷாந்த்
மாலுமி நிஷாந்த்

போர் காரணமாக, ஓமன் நாட்டு கடற்பகுதியில் சிக்கித் தவிக்கும் கப்பலில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மாலுமியின் உடலை மீட்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக ஓமன் நாட்டுக்கான இந்திய தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.

ஈரான் போர் காரணமாக, ஓமன் நாட்டு கடல் பகுதியில் எம்டி செலிஸ்டியல் என்ற வணிக கப்பல் எங்கும் செல்ல முடியாமல் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த கப்பலில் தூத்துக்குடி மாவட்டம், குரூஸ்புரத்தைச் சேர்ந்த 35 வயதான நிஷாந்த் உயிர்த்தநாதன் என்பவர் மாலுமியாக பணியாற்றி வந்துள்ளார்.

இவருக்கு கடந்த 8ஆம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து ஓமன் நாட்டின் துக்ம் (Duqm) துறைமுகக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தும் மருத்துவ உதவி கிடைக்காத நிலையில், 11-ஆம் தேதி அவர் உயிரிழந்தார்.

கப்பலில் உடலை பதப்படுத்தும் வசதி இல்லாத நிலையில் நிஷாந்தின் உடலை பிளாஸ்டிக் கவரில் சுற்றிக் குளிர்ந்த தண்ணீர் பாட்டில்களை வைத்து முடிந்தவரை அழுகாமல் தடுக்க போராடி வருவதாக சக மாலுமிகள் வீடியோ வெளியிட்டனர்.

மேலும் தனது கணவரின் உடலை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என நிஷாந்தின் மனைவி சராபின், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். 4 வயது மற்றும் 10 மாத குழந்தைகளை வைத்துக் கொண்டு நிற்கதியாக நிற்பதாக மனைவி சராபின் வேதனை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நிஷாந்த் உயிரிழந்த கப்பல் நிறுவனத்துடன் தொடர்ச்சியாக தொடர்பில் இருப்பதோடு, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் ஒருங்கிணைந்து செயல்பட்டுவருவதாக ஓமன் நாட்டுக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? குறையாதா? போர் நின்னா தான் உண்டு! செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் பதில்! | Will Fuel Become Costlier Again? Centre Hints at Future Price Revisions

Next Post

மாநிலத் தேர்தல்களை ஜோகூர்- புத்ராஜெயா இடையேயான போட்டியாக மாற்ற வேண்டாம்- நூர் அஸ்லீன் | Makkal Osai

Next Post
மாநிலத் தேர்தல்களை ஜோகூர்- புத்ராஜெயா இடையேயான போட்டியாக மாற்ற வேண்டாம்- நூர் அஸ்லீன் | Makkal Osai

மாநிலத் தேர்தல்களை ஜோகூர்- புத்ராஜெயா இடையேயான போட்டியாக மாற்ற வேண்டாம்- நூர் அஸ்லீன் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin