இவர் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் காதலுக்கு சேகரின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதை பொருட்படுத்தாத சேகர், கடந்த 2024 அக்டோபரில் தனது காதலியை கரம் பிடித்துள்ளார்.
மகன் பழங்குடியினர் சமூகப் பெண்ணை திருமணம் செய்ததால், அவரை குடும்பத்தினர் ஏற்க மறுத்துள்ளனர். இதனால், சேகர், தனது காதல் மனைவியுடன் அவரின் வீட்டிலேயே தங்கியுள்ளார்.
9 மாத கர்ப்பிணியான ராவணி, தனது முதலாம் ஆண்டு திருமண நாள் மற்றும் தலைத் தீபாவளியைக் கொண்டாட காத்திருந்தார். இந்த நிலையில் சேகர் தன்னுடைய மாமியார், மாமனாருடன் சேர்ந்து சமையல் செய்வதற்கு தேவையான விறகு சேகரிக்க காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளார்.
அந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த சேகரின் தந்தை சாத்தையா, மருமகள் மட்டும் தனியாக இருந்த நேரத்தில் அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். மாமனார் மனம் மாறி வந்திருப்பதாக நினைத்து ராவணி, மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
நிறைமாதக் கர்ப்பிணியான தன்னை நலம் விசாரிக்க வந்திருப்பாரோ எனவும் நினைத்து அவரை உபசரித்துள்ளார். ஆனால், நயவஞ்சகத்துடன் வந்தவர், மறைத்து வைத்திருந்த கோடாரியை எடுத்து திடீரென மருமகளை வெட்டப் பாய்ந்துள்ளார்.
அதை சற்றும் எதிர்பார்க்காதவர் சுதாரிப்பதற்குள் கழுத்தின் பின் பகுதியில் வெட்டு பட்டுள்ளது. அதிர்ச்சியில் உறைந்து போன ஸ்வராணி தன்னை விட்டுவிடும் படி கெஞ்சியுள்ளார். கல்நெஞ்சம் படைத்த மாமனார் கர்ப்பிணி என்றும் பார்க்காமல் அவரை ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் கர்ப்பிணி சரிந்து விழுந்ததும் சாத்தையா அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தகவல் அறிந்து அவரின் கணவர் சேகர் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்துள்ளார். ஆனால், அதற்குள் ராவணியின் உயிர் பறிபோயுள்ளது.
ஈருயிராக இருந்த கர்ப்பிணி சடலமாக கிடந்ததை கண்டு, அவரின் குடும்பத்தினர் கதறி துடித்தது அங்கிருந்தவர்களின் கண்களை குளமாக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பெண்ணின் மாமனார் சாத்தையாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாதி மறுப்பு திருமணம் செய்த பெண் நிறைமாத கர்ப்பிணி என்றும் பார்க்காமல், அவரின் மாமனாரே கோடாரியால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் தெலங்கானாவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
October 20, 2025 10:12 PM IST