Last Updated:
ஹோட்டல் நிர்வாகம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட வீரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின்போது இலங்கையில் உள்ள ஓட்டல் ஒன்றில் பெண் பணியாளரிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவர் அநாகரீகமாக நடந்து கொண்டதாக புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக அவர் மீது தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 ஆட்டத்துடன் வெளியேறியதை தொடர்ந்து, தற்போது அந்த அணியைச் சேர்ந்த வீரர் ஒருவர் வெளிநாட்டு மண்ணில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் கண்டியில் உள்ள ‘கோல்டன் கிரவுன்’ ஹோட்டலில் தங்கியிருந்தபோது, பாகிஸ்தான் வீரர் ஒருவர் அங்கு பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரிடம் மிகவும் தரக்குறைவாகவும், முறையற்ற விதத்திலும் நடந்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சூப்பர் 8 சுற்றில் இலங்கைக்கு எதிரான முக்கியமான போட்டிக்கு முன்னதாக இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடந்தபோது அந்த பெண் ஊழியர் உடனடியாக அலாரம் எழுப்பியதால், ஹோட்டல் பணியாளர்கள் விரைந்து வந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது குறித்து ஹோட்டல் நிர்வாகம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட வீரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்த விவகாரம் பாகிஸ்தான் அணியின் மேலாளர் நவீத் சீமாவிடம் கொண்டு செல்லப்பட்டது. நவீத் சீமா இதுபற்றி மன்னிப்பு கோரியதுடன், அந்த வீரருக்கு உடனடியாக அபராதம் விதித்து அந்த நேரத்திலேயே பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வர முயற்சி செய்தார். இருப்பினும், இந்த விவகாரம் அத்துடன் முடிந்துவிடவில்லை.


