ஆந்திரப்பிரதேச மாநிலம், அனக்காப்பள்ளியில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளைஞர், கால் இடறி கீழே விழுந்து, ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிக் கொண்ட சம்பவம் நெஞ்சை பதைபதைக்க வைத்தது.
அனக்காப்பள்ளியைச் சேர்ந்த ராஜபாபு என்பவர், அங்குள்ள ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஜென்மபூமி விரைவு ரயிலில் ஏற முயன்றார். அப்போது, கால் இடறி கீழே விழுந்த ராஜபாபு, ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிக் கொண்டார். உடனடியாக டிக்கெட் பரிசோதகர் கொடுத்த தகவலின் பேரில், லோகோ பைலட் ரயிலை நிறுத்தினார்.
அங்குமிங்கும் நகரமுடியாமல், சிக்கிக் கொண்ட ராஜபாபுவை ரயில்வே ஊழியர்களும், காவலர்களும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் நடைமேடையை உடைத்து, இளைஞரை மீட்டனர். இதனையடுத்து, படுகாயமடைந்த ராஜபாபு, அனக்காப்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
