Last Updated:
டொரண்டோ பியர்சன் விமான நிலையத்தில் டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் 4819 பனிப்புயலில் சிக்கி தலைகீழாகக் கவிழ்ந்தது. 80 பயணிகளில் 19 பேர் காயமடைந்தனர், 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
கனடாவின் டொரண்டோ பியர்சன் சர்வசேத விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் விமானம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணிகள் காயமடைந்தனர் மற்றும் மீட்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது.
டொராண்டோ விமான நிலையத்தில் தரையிறங்கும் போது டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் 4819 தலைகீழாகக் கவிழ்ந்தது. விபத்து நடந்தபோது விமானத்தில் 80 பயணிகள் இருந்தனர். 19 பேர் காயமடைந்தனர். அவர்களில் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்து மினியாபோலிஸிலிருந்து வந்த டெல்டா விமானத்தில் நிகழ்ந்தது. விமானத்தில் 80க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர். விமானம் ஓடுபாதையில் மோதியதால் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக தப்பினர். இருப்பினும், காயமடைந்தவர்களில் 18 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் மற்றும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்த பதினெட்டு பேரில் மூன்று பேர் படுகாயமடைந்ததாக துணை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
#JUSTIN கனடாவின் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விமானம் கவிழ்ந்து விபத்து
பனிப்புயலில் சிக்கிய விமானம் ஓடுபாதையில் தலைகீழாக கவிழ்ந்ததுவிபத்தில் விமானத்தில் இருந்த 18 பயணிகள் காயமடைந்தனர், 3 பேர் படுகாயம்
விபத்தின் போது விமானத்தில் 76 பயணிகளும்… pic.twitter.com/FWNcAQLcad
— News18 Tamil Nadu (@News18TamilNadu) February 18, 2025
விமான விபத்துக்கான காரணம் பனிப்புயல் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விமான நிலைய ஊழியர்கள் முழு விவரங்களையும் பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் கனடா நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை 2:45 மணிக்கு நடந்ததாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
February 18, 2025 9:48 AM IST