இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், அதுல் குல்கர்னி, ஜயான் மரியா கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்தப் படம் தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியானது. இந்தப் படத்துக்கு சேஷ் கதை எழுதியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மிருணாள் தாக்குர், அடிவி சேஷ் இணைந்து நடித்த ‘டகோயிட்’ திரைப்படம் உலக அளவில் ரூ.55 கோடி வசூலை ஈட்டியுள்ளது. அமேசான் பிரைம் ஓடிடியில் கடந்த மே 8ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது.
இந்த நிலையில், ‘டகோயிட்’ திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் படத்தில் நடிகை மிருணாள் தாக்குரின் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது.
