03

விமான ஓட்டிகளுக்கான அனுமதிப்பத்திரம் மற்றும் விமானத்தை இயக்குவது பற்றிய முழுமையான விவரங்கள் தெரிந்தவர்களை தவிர, வேறு எவருக்கும் விமானத்தை இயக்க அதிகாரம் இல்லை. கேமரான் ஏர்பார்க்கில் வசிப்பவர்கள் மற்றும் விமானங்களை ஓட்டுபவர்கள் பெரும்பாலும் தொழில் ரீதியாக அல்லது ஓய்வுபெற்ற இராணுவ விமானிகளாக இருக்கின்றனர். இவர்களுடன் சில மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பிற மக்களும் வசிக்கிறார்கள். இங்கு வசிக்கும் அனைவரும் தாங்கள் சொந்தமாக விமானங்களை வைத்திருப்பதை விரும்புகிறார்கள்.