Last Updated:
ரிலையன்ஸ் அறக்கட்டளை ஆற்றி வரும் பணிகளின் ஒரு முக்கிய மைல்கல்லாக இந்த இயக்கம் பார்க்கப்படுகிறது.
ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவரான நீடா அம்பானி, 2026-ஆம் ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று, இந்தியப் பெண்களின் முன்னேற்றத்திற்காக ‘ஹீரோஸ்’ (HEROES) என்ற புரட்சிகரமான புதிய இயக்கத்தைத் தொடங்கியுள்ளார்.
1911-ல் தொடங்கப்பட்ட சர்வதேச மகளிர் தினத்தின் 115-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் மறைந்திருக்கும் உள்ளார்ந்த வலிமையையும், தனித்திறமையையும் அடையாளம் கண்டு, அவர்களைச் சுயசார்பு கொண்ட தலைவர்களாக மாற்றுவதே இந்த இயக்கத்தின் முதன்மை நோக்கமாகும்.
பெண்கள் வெறும் இல்லத்தரசிகளாகவோ அல்லது பணியாளர்களாகவோ மட்டுமே முடங்கிவிடாமல், சமூகத்தை வழிநடத்தும் ஆற்றல்மிக்க சக்திகளாக உருவெடுக்க வேண்டும் என்று நீதா அம்பானி இந்த அழைப்பின் மூலம் வலியுறுத்தியுள்ளார். கல்வி, சுகாதாரம், விளையாட்டு மற்றும் கலை ஆகிய துறைகளில் ரிலையன்ஸ் அறக்கட்டளை ஆற்றி வரும் பணிகளின் ஒரு முக்கிய மைல்கல்லாக இந்த இயக்கம் பார்க்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் 2026-ஆம் ஆண்டு முழக்கமான “உரிமைகள். நீதி. நடவடிக்கை.” என்பதற்கு வலுசேர்க்கும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறம் முதல் நகர்ப்புறம் வரை உள்ள அனைத்துப் பெண்களும் தங்களுக்கு எதிரான பாகுபாடுகளைக் களைந்து, பொருளாதார மற்றும் அரசியல் தளங்களில் சாதிக்க இந்தத் தளம் வழிவகை செய்யும்.
தலைமைத்துவப் பண்புகளை வளர்த்தல் மற்றும் அசாதாரண சாதனைகளை நோக்கிப் பெண்களை ஊக்குவிப்பதன் மூலம், எதிர்காலத் தலைமுறைச் சிறுமிகளுக்கு இது ஒரு சிறந்த வழிகாட்டியாக இந்த ஹீரோஸ் இயக்கம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ஹீரோ!” – சர்வதேச மகளிர் தினத்தில் ‘HEROES’ இயக்கம் தொடங்கிய நீடா அம்பானி

