நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. கட்சி தலைவர்கள் அனைவரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த மதுராப்பூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது பேசிய அவர், தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் பாஜக தலைவர்கள் அர்த்தமற்றதை பேசிக்கொண்டு வருகிறார்கள். அவர்களில் ஒருவரோ தான் கடவுளின் குழந்தை எனக் கூறிகொள்கிறார்.” எனக் கூறினார்.
தொடர்ந்து, “நான் ஒன்று கேட்கிறேன். கலவரத்தை தூண்டவும், விளம்பரங்களின் வழியாக பொய்களை பரப்பவும், என்ஆர்சி-யை நடைமுறைப்படுத்துவதாக கூறி மக்களை சிறையில் அடைக்கவுமா கடவுள் அவரை அனுப்பியுள்ளார்? நூறுநாள் வேலை திட்டத்தை நிறுத்தவா கடவுள் அவரை அனுப்பினார்? ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்ச ரூபாயை செலுத்துவேன் என்ற உத்தரவாதத்திலிருந்து கடவுள் ஏன் பின்வாங்குகிறார்? என கேள்வி எழுப்பினார்.
நாடு முழுவதும் 6-ம் கட்டமாக 58 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
